Saturday, January 29, 2011

ஆலய நுழைவு போராட்டத்தை தடுக்க முயற்சி உத்தப்புரத்தில் போலீஸ் குவிப்பு




அரசியல் சாசனம் வழங்கிய வழி பாட்டு உரிமையை தலித் மக்களுக்குப் பெற்றுத்தரும் நோக்கத்துடன் ஜன வரி 31ந் தேதி உத்தப்புரம் முத்தாலம் மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்த உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு உத்தப்புரத்தை சுற்றி 300 மீட்டர் தூரத்திற்கு வெள் ளிக்கிழமை நள்ளிரவு முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித் துள்ளது. அத்துடன் முத்தா லம்மன் கோவில் வாசலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை குவித் துள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உத்தப்புரம் கிராமத்தில் தொன்று தொட்டு தலித் மக்கள் வழிபட்டு வந்த முத்தாலம்மன் கோவி லுக்குள் தலித் மக்கள் செல்லக்கூடாது என 1989 ஆம் ஆண்டு கட்டப்பஞ் சாயத்து செய்யப்பட்டது. இதன்படி தலித் மக்களை இக்கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தார்கள்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகம் முழுவதும் நடத் திய ஆய்வின் ஒருபகுதியாக உத்தப் புரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பின், அதன் ஒருபகுதி இடிக்கப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப்பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உத்தப்புரம் வருகிறார் என்ற செய்தியறிந்த தமிழகஅரசு, அவர் வரும் நாளுக்கு முன்பு தான் இச்சுவ ரின் ஒருபகுதியை இடித்தது. அதில் இன்னமும் தலித் மக்கள் செல்ல முடியவில்லை. மற்றபகுதி மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் சாக்கடை யாக மாறி தலித் மக்கள் இருக்கும் பகுதியில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருவதைத் தடுக்க வேண் டும். அரசியல் சட்டம் வழங்கிய “அனைவரும் பொது” என்ற விதியின் படி தலித் மக்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும். நிழற் குடை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மதுரையில் நவம்பர் 8 ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தலித் மக்களின் கோவில் வழிபாட்டு உரிமைக்காக ஜனவரி31 ந்தேதி உத்தப்புரத்தில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தப்படு கிறது. இந்த நிலையில் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மதுரை ,தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான காவலர்கள் உத்தப்புரத்தில் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனா லும், திட்டமிட்டபடி உத்தப்புரத்தில் ஆலயநுழைவுப்போராட்டம் நடத்தப்படுகிறது

No comments:

Post a Comment