| -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் |
| சமீபத்தில் லிட்டருக்கு 72 காசுகள் பெட் ரோல் விலையை உயர்த்தியதை அடுத்து, கடந்த மூன்று வாரத்திற்குள் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுவிட்டது. பெட்ரோல் விலை கள் மீதிருந்த கட்டுப்பாட்டை நீக்கியதைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணங்காட்டி, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைத் தங்கள் இஷ் டம்போல் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கின்றன. ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கமானது, திரும்பத் திரும்ப, தவறான ஒரு தகவலைத் தந்து கொண்டிருக்கிறது. அதா வது, 1996-98ஆம் ஆண்டுகளில் இடதுசாரி களின் ஆதரவுடன் இயங்கிய ஐக்கிய முன் னணி அரசாங்கம் நிர்வாக விலை ஏற் பாட்டைக் கைவிட்டதன் மூலம்தான் பெட்ரோலியப் பொருட்க ளின் விலைகள் மீதிருந்த கட்டுப்பாடு நீக்கப் பட்டது என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் வேண்டும் என்றே கூறாமல் மறைத்திடும் செய்தி என்ன வெனில், இந்நடவடிக்கையை இடதுசாரிகள் எதிர்த்தார்கள் என்பதையும் நிர்வாக விலை ஏற்பாட்டைக் கைவிட்ட அதே சமயத்தில், இடதுசாரிகளின் பந்தத்தின் காரணமாகத் தான் அரசாங்கமானது பெட்ரோலியப் பொருட் கள் இறக்குமதி மீதான வரிக்கட்டமைப்பை பூஜ்யத்திற்குக் குறைத்தது. ஆயினும், இந்த முடிவானது வாஜ்பாய் தலைமை தாங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத் தால் நிர்வாக விலை ஏற்பாட்டை ஒரு பகுதி கைவிட்ட அதேசமயத்தில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்கா மல், அமல்படுத்தப்பட்டது. இந்தப்பாரம்பரி யத்தையே இப்போதுள்ள ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து தெளி வாகத் தெரிவது என்னவெனில், நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கையை அமல் படுத்துவது என்பதில், காங்கிரசுக்கும் பாஜக வுக்கும் இடையே அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதேயாகும். பாதிக் கப்படுவதென்பது என்னவோ, சாமானியர்கள் தான். ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, 2009 மே மாதம் ஆட்சிக்கு வந்த போது, சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர்களாக இருந்தது. அன்று அது பேரலுக்கு 84 டாலர்களாகும். இதன் பொருள், சராசரியாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்ப தாகும். ஆனால், தில்லியில் இக்கால கட்டத் தில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.7.44 அளவிற்கு உயர்ந்திருக்கிறது. மேலும், பெட் ரோலியப் பொருட்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ள சூழ்நிலையில், இவ்வாறு மக்களைச் சூறையாடும் ஒரு விலை உத்தியைக் கடைப்பிடிப்பது குறித்து அரசாங்கமானது தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறது. உணவுப் பணவீக்கத்தின் காரணமாக, சாமானிய மக்கள், ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், பெட்ரோல் விலை உயர்வு பண வீக்கத்தின் பாதிப்பை மேலும் அதிகரித்திடும். ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளின் கட்டளைகளுக்கிணங்க, சந்தை சக்திகள்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் என்றால், சர்வதேச சந்தையில் மிக வேகமாக மாறக்கூடிய கச்சா எண்ணெய்யின் விலை கள், உள்நாட்டுச் சந்தைக்கு மாற்றப்பட்டு, அதன் காரணமாக சாமானியர்கள் மிகப் பல் வேறு வழிகளில் கடுமையாகப் பாதிக்கப்படு வார்கள். இன்று அது பெட்ரோலாக இருந்து, இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்திடும் லட் சக்கணக்கானோரை அது பாதித்திடும் அதே வேளையில், நாளை அது டீசல், பின்னர் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண் ணெய்க்கு மாறும் என்பதில் ஐயமில்லை. அர சாங்கம், தான்தோன்றித்தனமான வரி விதிப் பின் மூலமாக, பெட்ரோல் விலையை உயர்த்தி, ரத்த ருசி கண்டுவிட்டது. இது, அதனுடன் மட்டும் நின்றுவிடாது. இறக்குமதி செய்யப் படும் கச்சாய் எண்ணெய் மீது உயர் அளவில் மதிப்புக்கூட்டு வரிகளைப் போட்டுள்ளது. உண்மையில் அவை நம் நாட்டில்தான் பெட் ரோல், டீசல் போன்றவைகளாக சுத்திகரிக்கப் படுகின்றன. ஆயினும் சர்வதேச சந்தையில் அவற்றின் விலைகள் உயரும்போது, இங்கும் அரசாங்கம் அவற்றின் விலைகளை உயர்த்தி வருவாயைக் கணிசமாகத் உயர்த்திக்கொள் கிறது. வருவாய் அதிகரிக்கும்போது, அரசாங் கம் சர்வதேச சந்தை விலை உயர்வைக் கார ணம் காட்டி இங்கும் விலைகளை உயர்த்தி விடுகிறது. இவ்வாறு அரசாங்கத்திற்கு அதிக வருவாய் வரும்போது, அதன் பலனை, விலை களைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு அளிப்பதற்குப் பதிலாக, அப்போதும் விலை களை உயர்த்தி சுமைகளை மக்கள் மீது ஏற் றிக் கொள்ளையடிக்கிறது. இப்போது அவற் றின் மீது இருந்த கட்டுப்பாடுகளையும் நீக்கிய தன் மூலம் தன் கொள்ளையை மேலும் அதி கரிக்க வழிவகுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் எண்ணெய் நிறுவனங் களும் கொள்ளை லாபம் ஈட்ட உதவியுள்ளது. பெட்ரோலியத்துறைக்கு மானியம் அளித்து வருவதாக மத்திய அரசு பரப்பிவரும் பொய்ப் பிரச்சாரம் முழுக்க முழுக்கத் தவறான ஒன்று. ஏனெனில், இத்துறைக்கு வரும் ரொக்க வர வைக் கூர்ந்து பரிசீலித்தோமானால், இத் துறைக்கு அரசு எவ்விதமான மானியமும் அளித்திடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மானியம் அளிப்பதாக அரசு சொல்லும் தொகையைவிட வரி வருவாயின் மூலம் பெட்ரோலியத்துறைக்கு வரும் வரு வாய் என்பது மூன்று மடங்குக்கும் மேலாகும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் மானியங்கள் தொடர்பாக பிரதான ஊட கங்களில் வரும் விவாதங்கள் மக்களைக் குழப்பக்கூடிய வகையிலேயே அமைந்துள் ளன. இவை ‘‘திரும்பப் பெறுதல்’’ (‘ரனேநச-சநஉடிஎநசல’) போன்ற சொற்றொடர்களை அடிக் கடிப் பயன்படுத்தி மக்களைக் குழப்புகின் றன. உண்மையில் இந்தச் சொற்றொடரானது எவ்வித நஷ்டத்தையோ அல்லது லாபத் தையோ சுட்டிக்காட்டவில்லை. ஏனெனில் “திரும்பப் பெறுதல்கள்” என்பவை ‘இறக்கு மதி சமநிலை விலைநிர்ணயத்தை’ (iஅயீடிசவ யீயசவைல யீசiஉiபே) அடிப்படையாகக் கொண்டு நிர்ண யிக்கப்படுகிறதேயொழிய, உண்மையான உற் பத்திச் செலவினத்தின் அடிப்படையில் செய் யப்படுவதில்லை. இந்தியாவில் பெட்ரோலியப் பொருட் களின் மீதான சில்லரை விலைகள் மீது சுமத் தப்பட்டுள்ள அபரிமிதமான வரிகள், உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளதை விட மிகவும் அதிகமாகும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் மீதான வரிவிதிப்பு என்பது, விமானங்களில் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு விதிக்கப்படும் கலால் தீர்வை யைப் போல் மூன்று மடங்காகும். இன்னும் சரி யாகச் சொல்வதென்றால், டீசலுக்கு விதிக்கப் படும் கலால் தீர்வையைவிட விமானத்தில் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, தீர்வை குறை வாகும். இந்த முரண்பாடு அரசின் வர்க்கச் சார்பைத் தெளிவாகக் காட்டும். விமானங் களில் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு குறைந்த வரி என்பது சமுதாயத்தில் வசதி படைத் தோருக்கு அளித்திடும் மானியம் என்பதை விட வேறெதுவுமில்லை. அரசாங்கத்தின் வஞ்சகமான உத்திகள் மிகவும் தெளிவானவை. விலை உயர்வையும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீது அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதையும் நியாயப்படுத்தும் அதே சமயத் தில், பிரதமர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஆகியோர் பொதுத்துறை எண் ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமைகள் மோசமாக இருப்பதாகக் கண்ணீர் வடிக்கின் றனர். இப்போது, அதே அரசாங்கம், தன்னு டைய ‘ஏழை’ எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் அரசாங்கப் பங்குகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலானதை அதன் வருவாய்ப் பற் றாக்குறையை ஈடுசெய்யப்போவதாகக் கூறித் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய் திருக்கிறது. அதேபோன்று, அரசாங்கம் சுமார் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து ‘செஸ்’ (உநளள) வரியாக வசூலித்திருக்கிறது. இத்த கைய செஸ் வரி மூலமாக அரசாங்கம் விலை உத்தரவாத நிதியம் (யீசiஉந ளவயbடைளையவiடிn கரனே) உரு வாக்க வேண்டும் என்றும், அதன்மூலம் சர்வ தேச சந்தையில் ஏற்படக்கூடிய கச்சா எண் ணெய்யின் விலை ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறு சாமானியர்கள் பாதிக்கப்படுவதிலி ருந்து அவர்களைப் பாதுகாத்திட அரசு முன் வர வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அளித்திட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கண்டுகொள்ள மறுக்கிறது. அரசாங்கத்தின் இத்தகைய வஞ்சக உத்திகள் மக்கள் மத்தியில் அம்பலமாக்கப்பட வேண்டும். பெட்ரோலியப் பொருள்களின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதன் மூலம் விலை மற்றும் வரி அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சாமா னிய மக்களின் வயிற்றில் அடித்து அதன் மூலம் வருவாயைப் பெருக்கிடக்கூடிய ‘கற வைப் பசு’வாக எண்ணெய் நிறுவனங்களை அரசாங்கம் கருதுவதைத் தடுத்திடக்கூடிய விதத்தில் மக்கள் இயக்கங்கள் வலுப் படுத்தப்பட வேண்டும். தமிழில்: ச.வீரமணி |
Tuesday, October 26, 2010
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மக்கள் இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment