Wednesday, February 2, 2011

உத்தப்புரம் சமூக நீதிக்கான போராட்டம் ஓயாது...




- பி.சம்பத்


ஜனவரி 31ல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையிலான உத்தப் புரம் தலித் மக்களின் முத்தாலம்மன் கோவில் ஆலயப்பிரவேசப் போராட்டத்தை எதிர்கொள்ள திமுக அரசு கையாண்ட வழிமுறைகள் சட்டவிரோதமானவை; அரா ஜகமானவை; நேர்மையற்றவை. முத்தாலம் மன் கோவில் வளாகம், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறுவது போல், எந்த தனி நபருக்கோ சாதியினருக்கோ சொந்தமானதல்ல. ஊர்மக்களுக்கு பொது வான அரசுப்புறம்போக்கு இடம். இந்த ஆல யத்தில் வழிபடுவதற்கு தலித் மக்களுக்கு சம உரிமை உண்டு. முத்தாலம்மன் கோவில் அரசமர வழிபாடு என்பது தலித் மக்களின் தொன்றுதொட்ட உரிமையாகும். 20 ஆண் டுகளுக்கு முன்பு கட்டப் பஞ்சாயத்து மூலம் இதுபறிக்கப்பட்டது.

ஆலய வழிபாட்டில் சாதி வேறுபாட்டையோ, தீண்டாமையையோ அனுமதித்திட முடி யாது என அரசியல் சட்டமும், உயர்நீதி மன்ற உத்தரவுகளும் உத்தரவாதப்படுத்தி யுள்ளன. இதெல்லாம் தமிழக முதல்வ ருக்கோ, அரசு நிர்வாகத்திற்கோ தெரியாத தல்ல. இருப்பினும் மனித உரிமைகள் மறுக் கப்பட்டுள்ள தலித் மக்களுக்கு முத்தா லம்மன் கோவில் வழிபாட்டையும் அரச மர வழிபாட்டையும் கூட அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு நிலை எடுத்து, உத்தப் புரத்தைச் சுற்றி 144 தடையுத்தரவை பிறப் பித்தது. ஆயிரக்கணக்கான காவல்துறை யினரை குவித்து பதட்டத்தை ஏற்படுத்தி யது, முன்கூட்டியே கைது செய்யப்போவதாக தலித் மக்களையும் அவர்களுக்கு ஆதர வாக களத்தில் இறங்கிய மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல தலித் அமைப்புகளின் தோழர்களையும் மிரட்டியது. மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை இவ்வாறு ஒடுக்குவது சமூக அநீதி மட்டு மல்ல, மிகவும் அராஜகமானது.

ஆயினும் இந்த மிரட்டல்களையும் அடக்குமுறைகளையும் மீறி தலித் மக்க ளின் உரிமைக்கான போராட்டத்தில் ஏராள மானோர் கலந்துகொண்டு கைதாகினர் என்பது பாராட்டுக்குரியது. அதிலும் உத் தப்புரம் கிராமத்தில் ஏராளமான பெண்கள் உட்பட தலித் மக்கள் எழுச்சியோடு இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். அவர்க ளுக்கு ஆதரவாக சாதிகளைக் கடந்து ஏரா ளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டு தங்களது ஒருமைப்பாட்டையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது சாதி வெறிக்குத் தரப்பட்ட சவுக்கடியாகும்.

போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட இடங்களிலேயே போலீசார் மறித்த போதும், வேன் ஓட்டுநர்களை மிரட்டிய போதும் மதுரை மற்றும் தே.கல்லுப்பட்டியில் பெருமளவில் போராளிகள் குவிந்தது பாராட்டத்தக்கது.

குறிப்பாக, உத்தப்புரம் கிராமத்தையே போலீசார் முற்றுகையிட்டு ‘சீல்’ வைத்தது போன்று 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் முன்னதாகவே அந்த கிராமத்திற்கு சென்று தலித் மக்களின் பேரெழுச்சிக்கு தலைமை தாங்கியது கண்டு போலீசாரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மாவட்ட காவல்துறை ஏற்பாட்டில் மாவட்டஆட்சித்தலைவர் முன்பு பேச்சு வார்த்தை என்ற நாடகமும், ஜனவரி 31 காலையில் நடந்து முடிந்தது. பிரச்சனைக்கு தீர்வுகாண சட்டப்பூர்வமான எந்த ஆலோ சனையையும் மாவட்ட நிர்வாகம் முன்வைக் கவில்லை. தலித் மக்களின் சட்டப்பூர்வ உரி மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சாதிய சக்தி களை மீண்டும் தாஜா செய்யப்போவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தபோது பரி தாபமாக இருந்தது. சட்டவிரோதமான நிலை எடுக்கும் சாதிய சக்திகளை கட்டுப் படுத்துவதற்கு பதிலாக சட்டப்பூர்வ உரி மைக்காக போராடுபவர்களை தடுத்து கைது செய்வது, சிறையில் அடைப்பது, பொய் வழக்குப்போடுவது என்ன நியாயம் என்று கேட்டபோது, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து உரிய பதில் இல்லை. சாதிவெறிக்கு முன்னால் சட்டத்தை உறுதியாக அமல் படுத்த இயலாத நிலையையே உத்தப்புரம் தலித் மக்களின் பிரச்சனைகளில் திமுக அரசு திரும்பத்திரும்பக் கையாண்டு வரு வது வெட்கக்கேடானதாகும். இதைத்தான் “சாதி காக்கும் அரசு” என பெரியார் சாடி னார். சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட் சித்தலைவர் அலுவலகம் முன்பு தலித் மக் களின் ஜனநாயகப்போராட்டத்தை எதிர்த்து சாதி வெறியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்களை தாக்கப்போவதாகவும் கொல் லப்போவதாகவும் காவல்துறையினர் முன் னிலையிலேயே வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ளனர். அவர்கள் மீது காவல்துறையோ மாவட்ட நிர்வாகமோ இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்முறை பேச்சை வேடிக்கை பார்ப்பதும் ஜனநாயகப்போராட்டத்தை நசுக்க முனை வதும்தான் திமுக அரசின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா?

சட்டம் - ஒழுங்கு என்ற பெயரால் சட்டத் தையும் சமூக நீதியையும் குழிதோண்டிப் புதைக்கும் நிலையையே உத்தப்புரத்தில் தமிழக அரசு எடுத்துள்ளது. சமத்துவத்தை உருவாக்கி அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, அசமத்துவத்துக்குப் பாதுகாப்ப ளித்து பதட்டத்தை ஏற்படுத்தும் பணி யையே தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள் ளது. அரசியல் சாசனம் மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக சக்திகளும் தமிழக அரசின் இந்த நிலைபாட்டை ஒருபோதும் ஏற்கமாட் டார்கள்.

ஜனவரி 31 போராட்டம் தமிழக அர சுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையாகும். உத் தப்புரம் தலித் மக்களின் முத்தாலம்மன் கோவில் வழிபாட்டு உரிமையையும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதையும் இதர கோரிக்கைகளையும் தமிழக அரசு தாமத மின்றி நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் உத்தப்புரத்தில் சமூக நீதிக்கான போராட் டம் ஓயாது. தொடர்ந்து தீவிரமடையவே செய் யும்.

புகைப்படங்கள் உதவி - க.பாண்டியராஜன் சாத்தூர்.

No comments:

Post a Comment