சென்னை, நவ. 4- தமிழில் மொழி மாற்றம் செய் யப்பட்டும் திரைக்கு வராமல் இருந்த ‘டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்’ திரைப்படம் டிசம்பர் 3 அன்று வெளிவருகிறது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (என்எப்டிசி) நேரடியாக இப் படத்தை வெளியிடுகிறது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலை ஞர்கள் சங்கத்தின் ஆதரவு முயற்சி களுடன் இப்படம் வெளியாக இருக்கிறது. மலையாளம், தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே புகழ்பெற்ற மம் முட்டி நடித்து, ஜாபர் படேல் இயக்கிய ‘டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்’ திரைப்படம் மலை யாளம், இந்தி, ஆங்கிலம் உள் ளிட்ட மொழிகளில் தயாரானது. தேசிய அளவில் சிறந்த நடிகருக் கான விருதை மம்முட்டிக்கு இப் படம் பெற்றுத் தந்தது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், கடந்த 10 ஆண்டுகளாக திரையரங் குகளுக்கு வரமுடியாமல் படம் முடக்கப்பட்டிருந்தது. திரையரங்கு உரிமையாளர்களின் சாதிய ஆதிக்க குணம், தமிழில் மொழிமாற்றம் செய்த நிறுவனம் தொடர்பான பிரச்சனைகள் இப்படம் வெளியாக தடையாக இருந்தன என்று கூறப் பட்டது. இதுதொடர்பான வழக் கில் படத்தை 2007 டிசம்பரில் வெளியிட சென்னை உயர்நீதிமன் றம் ஆணையிட்டது. படத்தை வெளியிட முடிவு செய்த தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் படத்தின் மூலப்பிரதியை சீர்படுத்த வேண்டியிருந்ததாக தெரிவித்தி ருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வரும் டிசம்பரில் படத்தை வெளியிட கழகம் முடிவு செய்திருக்கிறது. இத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து வியாழனன்று (நவ.4) திரைப்பட இயக்குநரும் தொகுப்பாளருமான பி.லெனின், தமுஎகச மாநிலப் பொருளாளர் இரா.தெ.முத்து, செயற்குழு உறுப்பினர்கள் ஜேசு தாஸ், அ.குமரேசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ந.வெ. அருள், தமுஎகச திரைப்படக் கழக தென்சென்னை செயலாளர் ராசையா, உதயகுமார் ஆகியோர் என்எப்டிசி துணை பொது மேலா ளர் டி.ராமகிருஷ்ணனை சந்தித்து பட வெளியீடு குறித்து கலந்தா லோசித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் ஆதரவோடு அனைத்து மாவட்டங்களிலும் விரிவான முறையில் படம் குறித்த தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்வது குறித்தும், தலித் விடு தலைக்காக போராடிய அம்பேத் கரின் கதை மக்களைச் சென்ற டைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது |
Showing posts with label தமுஎகச. Show all posts
Showing posts with label தமுஎகச. Show all posts
Friday, November 5, 2010
அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு என்எப்டிசி-யுடன் தமுஎகச ஆலோசனை
Subscribe to:
Posts (Atom)