| -கே.சாமுவேல் ராஜ் |
| பிரச்சனைகளுக்கு பெயர் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நாம் காணமுடிகிற விசித்திரம் நந்திக்கும், சந்நதிக்கும் நடுவே சுவர் இருக்கும். அதுவும் பின்னர் தனியாக கட்டப்பட்ட சுவர். கதவைக் கூட அகற்றாமல் அத் தனை அவசரமாக கட்டப்பட்ட சுவர். இந்தச் சுவர் எதற்காக “நந்தன் நுழைந்த தென்புறவாசல் இது. ஆகவே தீட்டுப் பட்டுவிட்டதென அடைத்துவிட்டார்கள்” என சட்டென பதில் வருகிறது. ஆனால் அவர்களிடம் கேட்டால், சும்மா என் கிறார்கள். சுவர்கள் சும்மா கட்டப்படுவ தில்லை, உத்தப்புரம், பெரியார்நகர், எட மலைப்பட்டிபுதூர், சுல்தான் பேட்டை, நாகராஜபுரம் மக்களிடம் கேட்டால், சுவர்களின் கதைகள் புலப்படும். யார் இந்த நந்தன். தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரலாக, அடையாளமாக நந்தன் இருக்கிறார். நந்தன், நந்தனாராகி அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராவதற்கு கொடுத்த விலை சாதாரணமானதன்று, உயிர். இந்த நந்தனின் வாழ்க்கை நாம் சொல்கிற கதையல்ல, சேக்கிழார் சிதம்பரத்திலேயே அரங்கேற்றிய பெரிய புராணம் தரும் செய்திகளே. ஆதனூர் கிராமத்தின் சேரி புலைப் பாடி. அதுவே நந்தனின் குடியிருப்பு. புலையர் என்னும் இழிசாதி பிறப்பு. இறந்த மாடுகளில் இருந்து என்னென்ன தேவையோ அவற்றை எடுத்துத் தருவ தும், ஆண்டைகளின் நிலத்தில் உழைப் பதும் புலையர்களின் கடமை. இந்த புலைப்பாடி நந்தனுக்கு மேல்சாதி தெய்வ மான நடராஜர் மீது பக்தி பிறக்கிறது. தீராத பக்தி. நாளை சிதம்பரம் செல்வேன் என வருடக் கணக்கில் கூறி வந்ததால் “திரு நாளைப்போவார்” எனவும் அழைக்கப்பட் டவர். நந்தனின் சிதம்பரப் பயணத்திற்கு தடைவிதிக்கும் நோக்கில் ஆண்டை “மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா” என்றவாறே கொடுத்த மிகக் கடுமையான வேலைகள் அனைத்தையும் முடித்து ஒருநாள் சிதம்பரத்திற்கு பயணப்பட்டார். நடந்தே சிதம்பரம் சென்றவர் “ இன் னல் தரு இழிபிறவி இது தடை” என்று சிதம்பரம் ஊருக்குள் செல்ல தயங்கி எல்லையிலேயே சுற்றித் திரிந்தார். நந் தனின் பக்தியால் பரவசப்பட்ட நடராஜர், அவர் கனவில் தோன்றி “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்பிரிநூல் மார்பருடன் முன் அணைவாய்” என்றா ராம். கையோடு தில்லைவாழ் மூவாயிரவர் கனவிலும் ஒருசேர தோன்றி நந்தனுக் காக எரி அமைக்க உத்தரவிட்டாராம். அம்பலத்தானவனே உத்தரவிட்டதால் அந்தணர்கள் எரி அமைத்தார்களாம். நந்தன் தீக்குள் இறங்கி பூணூல் அணிந்த முனிவராய் வெளிப்பட்டு, தென்புற வாசல் வழியாக நுழைய, உடனே நடராஜர் நந்தனை ஆட்கொண்டு விட்டாராம். இவ்வாறு நந்தன் கதையை முடிக்கிறது சேக்கிழாரின் பெரியபுராணம். கொஞ்சமும் தயக்கமின்றி இழிபிறப் பாளன், புலையன், பூணூல் அணிந்து மேல்நிலையானான், தீயில் இறங்கி ஜோதியானான் என அடுக்குகிறது பெரிய புராணம். பூணூல் ஒருபோதும் விடு தலைக்கான சின்னம் அல்ல. மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறைகளின் சின்னம் என்பதே உண்மை. ஆகவே சேக்கிழா ரின் கூற்றை பகுத்தறிவின் துணை கொண்டு மறுவாசிப்பு செய்தால், இழி சாதியினர் என ஒதுக்கப்பட்டவர்களின் ஆலய வழிபாட்டு உரிமைக்காக போரா டிய பெரும் கிளர்ச்சிக்காரரே நந்தன் என் பதையும், அவர் ஆலயத்திற்குள் பிரவே சித்ததால் தீயில் இறக்கப்பட்டார் என் பதையும் கோவிலின் தென்புறவாசல் பயன்பாட்டில் இருந்ததையும், அது சுவர் எழுப்பி மறைக்கப்பட்டதற்கு நந்தன் பிரவேசமே காரணம் என்பதையும் உணர முடிகிறது. “ஆவுரித்து தின்னும் புலையரேனும் சிவநெறியில் நிற்பாராயின் அவரே யான் வணங்கும் கடவுளென்று” நந்தனாரை அறுபத்திமூன்று நாயன் மார்களில் ஒருவராக்கிவிட்டோம் என்று அவர்கள் பெருமிதப்படுவதற்கு ஒன்று மில்லை. இது சிவநெறியின் பெரு மையன்று, சாதிக் கொடுமையின் சிறுமை. அதன் சின்னமாகத்தான் இன் றும் நந்தன் சுவர் நிற்கிறது. ஆகவேதான் இந்தச் தீண்டாமைச்சுவர் அப்புறப்படுத் தப்பட வேண்டும் என போர்க்கோலம் தரிக்கிறோம். நாம் மட்டுமல்ல, நந்தனை மீட்டுரு வாக்கம் செய்திடும் பணி மிக முன்ன தாகவே துவங்கிவிட்டது. இந்த வரிசை யில் பலரைக் குறிப்பிட்டாலும் இவர் களில் சாமி சகஜாநந்தர் மிக முக்கியமா னவர். சிதம்பரத்திலேயே நந்தனுக்கு மடம் அமைத்து, நந்தன் பெயரால் கல்வி நிலையங்கள் நடத்தியவர். 11.9.1927 ல் சிதம்பரத்திற்கு வருகை தந்த காந்தியை அழைத்து நந்தன் கோவி லுக்கு அடிக்கல் நாட்டினார். நந்தனின் வழிவந்தவர்கள் நடராஜர் கோவிலுக்குள் செல்ல முடியாது என்பதால் நந்தன் மடத் திலேயே சிவாலயம் கட்டினார். தலித் மக்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வரக் கூடாது என்கிற தடையை தகர்க்க 1932 ல் மார்கழித் திருவிழாவின் போது ஏராளமான தலித் மக்களையும், மாணவர் களையும் அழைத்துக் கொண்டு ஆலய நுழைவிற்கு ஊர்வலமாக வந்தார். தேர் முட்டியருகே எதிர்ப்பாளர்கள் திரண்டு கல்வீசித்தாக்கி ஊர்வலத்தை தடுத்து விட்டனர். 1934 ல் சிதம்பரத்திற்கு மீண் டும் காந்தி வருகையின் போது தலித் மக்களோடு கோவிலுக்குள் வந்துவிடு வார் என்ற அச்சத்தில் கோவிலை மூடிவிட்டனர். “காந்தியே நீர் போம்! ஊர் ஊராய் பணம் பறிக்கும் காந் தியே நீர் போம்!” என எழுதி ஒட்டி யிருந்தனர். இப்போது இங்கு எந்தத் தீண்டாமையும் இல்லை,எவரும் உள்ளே வரலாம் என மார்தட்டுகிறவர்களே ஒரு நிமிடம், 1947 ஜனவரி 2ம் தேதியன்றுதான் சிதம்பரம் கோவில் தலித்துகளுக்காக திறக்கப்பட்டது. அதுவும் ஆன்மீக உணர் வில் அல்ல. 1947ல் உருவாக்கப்பட்ட ஆலய நுழைவுச் சட்டமே காரணம். அன் றைய தினத்தில் சிதம்பரம் கோவில் மட்டுமல்ல, திருப்பதி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம், திருவாரூர், காஞ்சி உள்ளிட்ட 140 பெரிய கோவில்களும் 8 சிறிய கோவில்களும் தலித் மக்களுக் காக திறந்து விடப்பட்டது, ஆகவே ஆலய நுழைவு என்பது எளிதாக நடந்து விட வில்லை, அது இரத்தம் தோய்ந்த வரலாறு. இன்று நடைபெறும் ஆலய நுழைவு போராட்டங்களுக்கு முன்னோடி நந்தன். ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மாபெ ரும் பண்பாட்டு அடையாளமாக நிலை பெற்று விட்ட நந்தன் புதினமாக, நாடக மாக, கவிதையாக, ஆய்வுக் கட்டுரையாக, வில்லுப்பாட்டாக, கூத்துப்பாட்டாக மக் களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன் னமும் அவன் பிறந்தானா? வாழ்ந்தா னா? கோவிலுக்குள் நுழைந்தானா? என கேள்வி எழுப்புகிறவர்களே, நீங்கள் இதே கேள்வியை இதர நாயன்மார்களைப் பார்த்து எழுப்ப முடியுமா? என்பது எங் களது நியாயமான கேள்வி. ஆலயத்தில் வழிபாட்டு உரிமை கோருவது ஆத்திகப் பிரச்சனை அல்ல, பண்பாட்டுப் பிரச்சனை. எனவே தான் நந்தன் தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்கிறது. நான் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றது கடவுள் மீதான நம்பிக்கையில் அன்று, அது சமூகத்தின் பொது நிறுவனம், ஆகவே அதில் எங்களுக்கு உரிமை வேண்டும் என நாசிக் காளாராம் கோவில் நுழைவுப்போராட்டத்திற்கு பிறகு அம் பேத்கர் அறிவித்தார். இதன்படியே இன்று தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிற கோவில்களை நோக்கி நகர்கிறோம். இத்தருணத்தில் ஆலயத்தில் தலித் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முதலில் துவக்கிய நந்தனை இழிவுபடுத் தும் விதத்தில் சுவர் இருப்பது எவ்வகை யிலும் நியாயமானதன்று. தலித் உள்ளங் களையும் ஜனநாயக உள்ளங்களையும் ரணப்படுத்தும் இந்த சுவர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். அரசின் கையில் ஆலயம் வந்தபிறகும் நீதிமன்ற நிழலில் பதுங்குவது சமூக நீதியாகாது. அரூபமான சாதியத்தின் காட்சி வடிவ மாக எழுப்பப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்திட தில்லையில் நெடுங் காலமாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2010 ஜூலை 14 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி 2000 தோழர்களுடன் கோவில் முன்பு கூடி சுவரை அகற்றக்கோரியது. அடுத்தகட்ட போராட்டத்திற்கு களம் அமைத்திட 6.1.11 அன்று சிதம்பரத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங் களில், மக்களைத் திரட்டுவதற்காக பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறது. அநீதியான சுவரை அகற்ற ஆயிரக்கணக் கான மக்களுடன் மீண்டும் வருவோம். தடிகொண்டு தாக்கினாலும், ஏகடியம் பேசினாலும் வரலாற்றின் பயணம் முன் னோக்கியே சுழலும். எரிதழலில் நின் றழைக்கும் நந்தனின் குரலை திசை யெங்கும் சேர்ப்போம்! தீண்டாமைப் பெருஞ்சுவரை தகர்த்து சமூக நீதி காப்போம்.!! கட்டுரையாளர், பொதுச்செயலாளர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி |
Thursday, January 6, 2011
நந்தன்: ஆத்திகப் பிரச்சனையல்ல! பண்பாட்டுப் பிரச்சனை!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment