Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

Monday, November 8, 2010

இந்தியாவை அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக்காதே! இடதுசாரிகள் போர்க்கோலம்

 
புதுதில்லி, நவ.8-

இந்தியாவை வாங்க முயற்சிக்க வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதி பதியை வலியுறுத்தியும் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக் காதே என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தியும் கண்டன முழக்கத்துடன் நாடு முழுவதும் நவம்பர் 8 திங்களன்று நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக இந்தியா வந்துள்ள ஜனாதி பதி ஒபாமாவின் வருகையை எதிர்த்து நடைபெற்ற இந்த மகத்தான இயக்கத் தின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப்பேரணிகள் உட்பட பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெற்றது.

புதுதில்லி

ஒபாமா வருகையை எதிர்த்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில், நாடாளுமன்ற வீதியில், ஜந்தர்மந்தர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் அபானிராய் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லமையை நிறுவுவதின் ஒரு பகுதியாக, நாடுகளின் இறையாண்மை மற்றும் பல்வேறு நாட்டு மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடிய வகையில் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தியாவுடன் ராணுவ அணிச்சேர்க்கை என்ற பெயரில் மக்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்திட வேண்டும் என்று இந்தியாவை நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.

மேலும், போபால் நச்சுவாயு விபத்தில் பலியானவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய இழப்பீட்டை அளித்திடவும், தொழிற்சாலை வளாகத்தைச் சுத்தப்படுத்தித்தரவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும், போபால் வழக்கில் விசாரணையை எதிர் கொள்வதற்காக வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்தியாவின் அயல்துறைக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்க மூலதனம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக வேளாண்மை, சில்லரை வர்த்தகம், கல்வி மற்றும் இதர சேவைகளைத் திறந்துவிட நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவப் பங்காளியாக மாற்ற வகை செய்யும் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு வடிவமைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இராக்கில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 50 ஆயிரம் துருப்புக் களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கியூபா மீதான பொருளா தாரத் தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும், பாலஸ்தீனம் மற்றும் அரபு நிலப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு இஸ்ரேல் வெளியேறும் வரை அதற்கு அளித்திடும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக் கோரியும் வலியுறுத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கே. வரதராசன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சுனீத் சோப்ரா, நூருல் ஹூடா, தபன்சென், பாசுதேவ் ஆச்சார்யா, ஹன்னன்முல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

தமிழகம்

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் கூட்டாக பெரும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டன.

சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன இயக்கத்தில் ஆர்.நல்ல கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், பி.வி.கதிரவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான மையங்களில் பல்லாயிரக்கணக்கானோர் செங்கொடி ஏந்தி, ஒபாமா வருகைக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.

புதுச்சேரியில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்), பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்ற மாபெரும் கண்டன இயக்கம் நடைபெற்றது.

கேரளா

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான மாணவிகள் பல்கலைக்கழக கல்லூரி முன்பு குவிந்தனர். அங் கிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.

மாநிலம் முழுவதும் இடது ஜனநாயக முன்னணி பெரும் பேரணி களையும், கண்டன இயக்கத்தையும் நடத்தியது.

மேற்குவங்கம், திரிபுராவிலும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப்பேரணிகள் நடைபெற்றன.

ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

Sunday, November 7, 2010

ஒபாமாவின் கொள்கைகளை எதிர்ப்பது ஏன்?


-டி.கே.ரங்கராஜன் எம்.பி.
அமெரிக்காவின் 44வது அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். உலகின் அதி காரம் வாய்ந்த பதவி என்று கருதப்படும் இந்த பதவிக்கு ஆப்பிரிக்கர் - அமெரிக்கரான கறுப் பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா தேர்வு செய் யப்பட்ட பிறகு அவர் இந்தியா வருவது இது முதன்முறையாகும்.

அமெரிக்க அதிபராக பல அறிவு ஜீவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் 1789ம் ஆண்டு ஏப்ரல் 30ம்தேதி பதவியேற் றார். அதன் பிறகு 219 ஆண்டுகள் கழிந்த பிறகு தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டில் ஜனாதிபதியாக வர முடிந்துள் ளது. எவ்வளவுதான் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருந்தபோதும், ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் சமூக வாழ்க்கையில் இனவெறி எந்தளவுக்கு புரையோடி போயுள் ளது என்பதை இதன் மூலம் உணர முடியும்.

நவம்பர் 8ம்தேதி நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்ற உள்ளார். அனைத்து நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடது சாரி உறுப்பினர்களும் அவரது உரையை கேட்க உள்ளனர். கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் அவர் ஆற் றிய உரையை இடதுசாரிக் கட்சிகள் புறக் கணித்தன.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ்சுக்கு நாடாளுமன்றத்தில் உரை யாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது அரசை இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தது தான் இதற்கு காரணம்.

ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் ஒபாமா இந்தியா வந்துள்ளதாக கூற முடியாது. அமெ ரிக்காவில் நடந்த மாகாண இடைத்தேர்தலில் அவரது ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந் ததோடு செனட் சபையில் அவரது கட்சி சிறு பான்மையாக குறுகி விட்டது. இதனால் அவ ரது பதவிக்கு ஆபத்து இல்லை என்றபோதும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டு மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற போகிறார் என்பது கூர்மையாக கவனிக்கப்படும்.

தேர்தலின்போது பாரக் ஒபாமா படாடோ பமாக அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா குறித்து வெளியான புள்ளி விபரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளது. அந்நாட்டின் 90 சத வீத மக்கள் கடுமையான பொருளாதார சிக்க லில் சிக்கியுள்ளனர். வேலையின்மை தொடர் ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை வாசி விண்ணை தொடுகிறது. 2008ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வரு கிறது என்பதை கணிப்புகள் கூறுகின்றன.

உற்பத்தியை பெருக்குவது எப்படி என்று உலகிற்கு அமெரிக்கா உபதேசம் செய்கிறது. சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகிய சர்வதேச நிதி அமைப்பு களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு பல்வேறு நிர்ப் பந்தங்களை தருவதோடு, ஆலோசனை களை வழங்குகிறது அமெரிக்கா. ஆனால், அந்த நாட்டின் பொருளாதார நிலையோ மிக வும் பரிதாபகரமான நிலையிலேயே உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 140 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. மேலும் 829 வங்கிகள் சிக்கலில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் கடந்த கால ஆட்சியாளர் கள் பின்பற்றிய உள்நாட்டு, வெளிநாட்டு கொள் கைகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர் ஒபாமா. ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம். 2009 அக்டோபரில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்த விபரத்தை பதிவு செய்துள்ளன.

முந்தைய புஷ் நிர்வாகம் ஏற்படுத்திய பல சிக்கல்களை, கோளாறுகளை தீர்ப்பதற்கு ஒபாமா அளித்த பல வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன பிரச்சனைகளில் முந்தைய நிர் வாகம் மேற்கொண்ட அதே அணுகுமுறை யையே ஒபாமா நிர்வாகமும் பின்பற்றுகிறது. இராக் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியவில்லை. அந்த நாட்டில் முறையான ஜனநாயக ஆட்சியை நிறுவவும் இல்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள்தான் அந்தநாட்டின் பொரு ளாதாரத்தை தீர்மானிக்கின்றன. உலக நாடு களை சுரண்டுவதே அவர்களது நோக்கம். எல்லா வளமும் உள்ள அமெரிக்க நாட்டின் வர்க்க குணம் என்பது ராணுவ தளவாட- தொழிலை (ஆடைவையசல ஐனேரளவசயைட ஊடிஅயீடநஒ) அடிப்படையாக கொண்ட ஒரு நாடாகவே உள்ளது. சுருக்கமாக சொல்வதானால் ஒரு நாள் தீபாவளியை நம்பி சிவகாசி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகம் முழு வதும் போர் வெடித்து வேட்டுச் சத்தம் கேட் டுக் கொண்டேயிருந்தால்தான் அமெரிக்கா வின் பொருளாதாரம் நிலைபெற முடியும்.

இன்றைக்கு உலகில் 700 முதல் 800 இடங்களில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை நிறுவியுள்ளது. சிறிதாகவோ, பெரியதாகவோ நூற்றுக்கும் மேற்பட்ட நாடு களில் அமெரிக்க ராணுவம் உள்ளது. பல் வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிடுகிறது. முன்பு ஈரானுக்கும், இராக்குக் கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றது போல இப்போது இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விற் பனை செய்கிறது.

1950களில் நாம் உணவுக்கு அமெரிக்கா விடம் கையேந்தி நின்றோம். பிஎல் 480 என்ற சட்டத்தின்படி நமக்கு உணவு வழங்க வகை செய்யப்பட்டது. அமெரிக்க ஒபாமா தன்னு டைய மக்களுக்கு வேலைகேட்க சீனாவை யும், இந்தியாவையும் நாட வேண்டிய நிலை யில் உள்ளார். ஒபாமா ஒற்றை ஆளாக இங்கு வரவில்லை. அவருடன் 250க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் உடன் வருகிறார்கள். அமெ ரிக்காவில் தயாராகும் ராணுவ தளவாடங்கள், விமானங்கள், அணு உலைகள் ஆகியவற் றுக்கு சந்தை தேடி இங்கே வருகிறார் ஒபாமா. இவற்றை நாம் வாங்கினால் அவர்களுடைய நாட்டில் தொழில்வளர்ச்சி ஏற்படும், இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும். அவர்களது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை இறக் குமதி செய்து, நமது சந்தையில் விற்க வேண் டும் என்று கோரிதான் வந்துள்ளார்.

ஒபாமாவின் முதல்நாள் பயணத்திலேயே அமெரிக்க நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் 2.2 பில்லி யன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உடன்பாடு செய்துகொண்டுள்ளன. இரு தரப்பு வர்த்தக ஒத்துழைப்பு அதிகரிக்குமென குதூகலிக் கிறார் இந்திய பெருமுதலாளி டாடா. அமெ ரிக்காவில் 50ஆயிரம் பேருக்கு இந்த உடன் பாடுகளால் வேலை கிடைக்கும் என்கிறார் ஒபாமா. ஆனால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் என்பதை ஏற்கனவே நிராகரித்துவிட்டார். உயர் தொழில் நுட்ப விஷயங்களில் கட்டுப்பாடு படிப்படி யாகத்தான் தளர்த்தப்படும் என்றும் கூறி விட்டார்

ஆனால் விவசாயம், உயர் கல்வி, இன்சூ ரன்ஸ், வங்கி ஆகியவற்றில் அந்நிய முத லீட்டை அதிகரிக்க வேண்டுமென்று அமெ ரிக்கா நிர்ப்பந்தம் செய்கிறது. இதற்கு மன் மோகன்சிங் அரசும் துணைபோகிறது. சில் லரை வர்த்தகத்தில் தங்களை அனுமதிக்க வேண்டுமென்று வால்மார்ட் அதிகாரிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் தங்களது மால்களை நிறுவ அனுமதிக்க வேண்டுமென அவர்கள் நிர்ப்பந் திக்கின்றனர். சில்லரை வர்த்தகத்தில் வால் மார்ட்டை அனுமதித்தால் 4 கோடி சில்லரை வர்த்தகர்களின் நிலை, வாழ்க்கை சீரழியும்.

போபால் விஷவாயு விபத்துக்கு காரண மான ஆண்டர்சனை ஒப்படைப்பது குறித்து ஒபாமா எந்த உறுதிமொழியும் அளிக்க வில்லை. கியூபாவின் மீதான பொருளாதார தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக்காண்டு தீர்மானம் நிறைவேற் றியபோதும் அதை அலட்சியப்படுத்துவோர் பட்டியலிலேயே ஒபாமாவும் உள்ளார்.

ஒபாமா ஜனாதிபதியாக வந்ததால் கறுப் பின மக்களின் வாழ்க்கை விடிந்துவிட வில்லை. அமெரிக்காவில் வேலையின்மை 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் கறுப் பின மக்களின் வேலையின்மை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இனவெறி என்பது பல் வேறு வடிவங்களில் அமெரிக்க சமூக வாழ் வில் தொடரவே செய்கிறது.

எந்தவொரு தனிநபரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சி களோ எதிர்ப்பதில்லை. அவர் பின்பற்றும் கொள்கை என்ன? அவர் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதை பொறுத்தே ஆதரவு அல்லது எதிர்ப்பு என் பதை முடிவு செய்கிறது. அந்த வகையில் ஒபாமா இந்தியாவை ரட்சிக்க வரவில்லை. மாறாக, சுரண்டலை, நிர்ப்பந்தத்தை தீவிரப் படுத்தவே வருகிறார். மரண வியாபாரியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவே இங்கு வருகிறார். அவரது வருகையை எதிர்க்க இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி அனைத்து தேசபக்தர்களும் முன்வர வேண்டும்.

நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரிக்கட்சிகள் நடத்திட உள்ள ஏகா திபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேசமே அணி திரளட்டும்.

கைவிரித்துவிட்டுத்தான் வருகிறார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந் திய வருகை ஊடகங்களால் பெருமளவு பிர மாதப்படுத்தப்படுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசும் அவரது வருகைக்கு அதீத முக் கியத்துவம் கொடுக்கிறது. இந்தியாவுக்கு அவர் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கப்போவ தாக ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் வெள்ளை மாளிகையிலிருந்து புறப் படுவதற்கு முன்பே ஒபாமா இந்த எதிர்பார்ப்பு களை பொய்யாக்கிவிட்டுத்தான் புறப்படுகிறார்.

ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்ற கோரிக் கை நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் ஒப்புக்காவது இந்தக் கோரிக்கையை ஆதரிப்ப தாக கூறிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் ஒபாமா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந் தியாவை இணைப்பது குறித்து அமெரிக்கா எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டார். அமெரிக்கா தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று கூறுபவர்கள் மனதில்கொள்ள வேண் டிய விஷயம் இது.

இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அணுசக்தி உடன்பாட்டில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட்டது. இந்த உடன்பாடு என்பது இந்திய அரிசியையும், அமெரிக்க உமி யையும் கலப்பது போன்றது. இதனால் அமெ ரிக்காவுக்குத்தான் லாபம் என்று இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து கூறிவந்துள்ளன. அணுக் கழிவு மறு உபயோக தொழில்நுட்பத்தை இந் தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என்று கூறப் பட்டது. ஆனால் இதுகுறித்தும் எந்த உத்தர வாதத்தையும் வழங்க முடியாது என்று ஒபாமா கைவிரித்துவிட்டார்.

ஆனால் தமது வருகை இந்தியா-அமெ ரிக்கா இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று ஒபாமா கூறியுள்ளார். இந்தியாவின் எதிர்பார்ப்பு எதையும் நிறை வேற்றாமல் ஒத்துழைப்பு எப்படி அதிகரிக்கும்?

வெளிப்பணி  ஒப்படைப்பு விஷயத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்க முடியும், இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தாம் கவலைகொள்ள முடியாது என்றும் ஒபாமா கூறியுள்ளார். இவ்வாறாக முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு சாதகமான எந்த பதிலையும் ஒபாமா அளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் ஒபாமாவுடன் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க தொழிலதிபர்கள் படை பட்டாளத் தோடு திரண்டு வருகிறார்கள். சில்லறை வர்த் தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனு மதிக்கவேண்டும், காப்பீடு, வங்கி உள்ளிட்ட நிதித்துறைகளில் அந்நிய மூலதனத்தை அதி கரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங் களில் மன்மோகன் சிங் அரசுக்கு ஒபாமா நிர்ப் பந்தத்தை ஏற்படுத்தப்போவது உறுதி. இதனால் இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

அமெரிக்க நிறுவனங்களைப்பற்றி எங்க ளுக்கு கவலையில்லை. இந்திய நிறுவனங் களின் பாதுகாப்பே முக்கியம் என்று சொல்லும் திராணி, தெம்பு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வி. ஒபாமாவின் வருகையை இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பது எந்த அளவுக்கு நியாயம் என்பதற்கு அவரது இந்திய விரோத கருத்துக்களே சாட்சி.