Saturday, January 29, 2011

தமிழக மீனவர்கள் தொடர் படுகொலை இலங்கை தூதரகம் முற்றுகை ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது



தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தின ரால் தொடர்ந்து படுகொ லைச் செய்யப்படுவதை கண்டித்து வெள்ளியன்று (ஜன.28) இலங்கை தூதர கத்தை முற்றுகை யிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை போலீ சார் கைது செய்தனர்.

இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்து வருகிறது. கடந் தாண்டு மட்டும் 20 மீனவர் கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். அவ்வப் போது மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பிடுங்கிக் கொள் வதோடு, படகுகளையும், வலைகளையும் சேதப் படுத்தி வருகின்றனர். கடந்த 15 தினங்களில் இரண்டு தமிழக மீனவர்களை இலங் கை ராணுவம் படுகொலை செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களையும், மீனவர்கள் படுகொலைச் செய்யப்படுவதையும் தடுக்கக் கோரி இப்போராட் டம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை விட்டு மீனவர்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர் படுகொலையை மத்திய அரசு வேடிக்கை பார்க்காதே, மீனவர் படு கொலையை தடுக்க ராஜீய ரீதியான நடவடிக்கை எடு, இலங்கை அரசு சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட் டைகளை கட்சி ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஏந்தி வந்தனர்.

“பிழைப்புத் தேடி கட லுக்குச் சென்றால், பிண மாக திரும்புவதை தடுத்து நிறுத்து”, “வாய்ச் சவ டாலை ஓரங்கட்டி மீனவர் கள் உயிரை பாதுகாத்திடு”, “ மத்திய, மாநில அரசுகளே, மீனவர் வாழ்வுரிமையை பறிக்காதே” என்பன போன்ற கோஷங்கள் போராட்டத்தில் எழுப்பப் பட்டன.

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பேசியது வரு மாறு:

தமிழக மீனவர்கள் கட லில் மீன் பிடித்துக் கொண் டிருக்கும் போது 400க்கும் மேற்பட்டோரை இலங்கை ராணுவத்தினர் சுட்டு படு கொலை செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி ஜெயக் குமார் என்ற ஊனமுற்ற மீனவரை, கயிற்றால் கட்டி கடலில் தள்ளி இலங்கை ராணுவம் படுகொலை செய் துள்ளது. தமிழக மீனவர் களின் வாழ்வுரிமையான மீன்பிடியை தடுக்கும் வகை யில் இத்தகைய படுகொலை களை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்தப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக மக்கள் ஏகோபித்தமான முறையில் குரல் எழுப்பிய பிறகும், படுகொலை தொடர்கிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு பிறகு மத்திய அரசு, இலங்கை அர சை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு அறிக்கையோடு நிறுத்திக் கொள்ளாமல் உரிய நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறோம்..

கடல் எல்லையில், இந் திய கடற்படையும், இலங் கை கடற்படையும் இணைந்து கூட்டு ரோந்து நடத்துவதன் மூலமே இலங் கை ராணுவத்தினரின் அத்துமீறல், மீனவர்கள் படுகொலைகளை தடுக்க முடியும்.

இலங்கை அரசு, இனி படுகொலைகள், துப்பாக் கிச்சூடு நடக்காது என்று தான் கூறியுள்ளது. அப் படியெனில் இதற்கு முன்பு நடந்த அனைத்து தாக்கு தலுக்கும், அத்துமீறல்களுக் கும், படுகொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது மத் திய, மாநில அரசுகள் தலை யிடாமல், தடுக்காமல் உள் ளன. மக்கள் பாதிக்கப் படும் போது அரசியல் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதையும், ஆறுதல் கூறச் செல்வதையும் திசை திருப்பக் கூடாது.

இவ்வாறு அவர் கூறி னார்.

கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ், வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்மு கம், மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்தி ரன் எம்எல்ஏ, ஏ.ஆறுமுக நயினார், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் பா.கருணாநிதி ஆகியோர் முன்செல்ல தூதரகத்தை முற்றுகையிட சென்ற கட்சி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்

No comments:

Post a Comment