ஜன. 31 உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் நுழைவு போராட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்
ஜனவரி 31 அன்று நடைபெறவுள்ள உத்த புரம் முத்தாலம்மன் கோவில் நுழைவு போராட் டத்தை வெற்றிகரமாக்குவோம் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் கள் பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ் ஆகியேர் அழைப்பு விடுத்துள்ளனர்
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வழிபாட்டுத்தலங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இதில் எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினரையும் அனுமதிக்க மறுப்பதோ, பாரபட் சம் காட்டுவதோ சட்டவிரோதமானது. இது தொடர்பாக ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன. இருப்பினும் பெரியார் பாதையில் நடைபோடுவதாகக் கூறும் திமுக ஆட்சி நடை பெறும் தமிழ்நாட்டில் அத்தகைய நிலை நீடிப் பதும் காவல்துறையினரும், மாவட்ட நிர்வாக மும் சட்டவிரோதமாக ஆதிக்க சக்திகளின் நிலைபாட்டிற்கு துணைபோவதும் ஏற்கத்தக்க தல்ல. இது சட்டப்பூர்வ ஜனநாயகத்தையும், சமூக நீதியையும் குழிதோண்டி புதைப்பதற்குச் சமமாகும்.
உத்தப்புரம் தலித் மக்களுக்கு முத்தாலம்மன் கோவில் அரசமர வழிபாடு என்பது பாரம்பரிய மான தொன்றுதொட்ட உரிமையாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பஞ்சாயத்து மூலம் தலித்துகளின் இந்த உரிமை பறிக்கப் பட்டது. கட்டப்பஞ்சாயத்து தண்டனைக்குரி யது என நீதிமன்றமும் அதனை ஏற்க முடியாது என தமிழக அரசும் பலமுறை உத்தரவிட்ட பிறகும் இந்நிலை நீடிப்பது அவமானகரமான தாகும். மேற்படி உரிமையை நிலைநாட்டவும், தங்களுக்கு உத்தப்புரத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தரக் கோரியும் உத்தப் புரம் தலித் மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்காக குரல் கொடுத்து பல இயக்கங்களை நடத்தியுள்ளன. முதலமைச்சருக்குப் பல கடிதங்கள் எழுதப் பட்டுள்ளன.
எனினும், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக் காத நிலையில் உத்தப்புரம் தலித் மக்கள் தங் களது சட்டப்பூர்வமான உரிமைகளை நிலை நாட்ட 31.1.2011 அன்று காலை 11 மணியளவில் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் வழிபாட் டிற்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைமையில் ஆலயப் பிரவேசம் நடத்த உள்ளனர். இந்த இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் உ.வாசுகி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி.சம்பத், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், தீண்டாமை ஒழிப்பு முன் னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மகேந்திரன், என்.நன்மாறன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. அண்ணாதுரை, புறநகர் மாவட் டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், கே.ஆர். கணேசன் (சிஐடியு), முத்துக்கண்ணன் (வாலி பர் சங்கம்), ஜோ.ராஜ்மோகன் (மாணவர் சங்கம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ், பொன்னுதாய் (மாதர் சங்கம்) உள்பட மாநில, மாவட்டத் தலைவர் களும் பல்வேறு தலித் அமைப்புகளின் தலை வர்களும் தலைமையேற்று பங்கேற்கிறார்கள்.
தமிழக முதல்வரும், தமிழக அரசு நிர்வாக மும் உடனடியாக தலையீடு செய்து தலித் மக்களின் சட்டப்பூர்வமான ஜனநாயக உரி மையை நிலைநாட்டுமாறும், நிழற்குடை அமைப்பது உள்பட இதர கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம். தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் நடைபெறும் இந்த இயக்கத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஜனநாயக இயக் கங்களும் பேராதரவு தருமாறு வேண்டி கேட் டுக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment