Tuesday, October 19, 2010

நாடாளுமன்ற அரசியலும் பண ஆதிக்கமும்



2009ம் ஆண்டு 15வது நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 300 பேர் கோடீஸ்வரர்கள் என கணக்குகள் தெரிவிக் கின்றன. 14வது மக்களவையில் இந்த எண் ணிக்கையானது 543ல் 154 பேர் என்றும் கணக்குகள் தெரிவிக்கின்றன.

சுதந்திரத்திற்கு பிறகு ஏகபோக முதலாளி களும் பெருவியாபாரிகளும் தங்களது பண பலத்தை பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை வசீகரிக்க முயற்சித்தனர் என்பது ரகசியமான தல்ல, ஆனால் தற்போது மக்களவை பிரதி நிதிகளாகவே பெருமுதலாளிகளும், பெரு வியாபாரிகளும் வருவதை பார்க்கிறோம். மக்க ளவையில் காங்கிரசை சார்ந்த எம்.பிக்கள் 203 பேர்களில் 138 பேர் கோடீஸ்வரர்களாக உள்ள னர். பி.ஜே.பிக்கு 58 கோடீஸ்வரர்கள் எம்.பிக் களாக உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்போது வேட்பு மனுவில் அவர்கள் அளித்த கணக்குபடி அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3075 கோடியாகும்.இது அவர்களாகவே அளித்த காகிதக்கணக்கு மட்டுமே. ஆனால் அவர் களின் சொத்துமதிப்பு இதைவிட பலமடங்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என பெருமையாக சொல்லப்படு கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண் ணிக்கை 72 கோடியாகும். 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக மத்தியஅரசு செலவு செய்த தொகை 1120 கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசு தெரிவித்த கணக்குபடி வேட்பாளர்கள் செலவழித்த தொகை 10 ஆயி ரம் கோடிரூபாய்க்குமேல். தேர்தலுக்காக நாடா ளுமன்ற வேட்பாளர் ரூ.25 லட்சமும், சட்ட சபை வேட்பாளர் ரூ.10 லட்சமும் செலவு செய்ய தேர் தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அனைத்து நாடாளுமன்ற வேட்பாளர்களும் 543தொகுதி களில் எவ்வளவு செலவு செய்திருக்கக் கூடும். ஒரு தொகுதியில் சராசரியாக 10 வேட் பாளர்கள் என கணக்கிட்டால் 543 தொகுதி களில் 1350 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் 10,000 கோடிரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது என்றால் தேர்தலில் பண ஆதிக்கம் எந்த அளவு இருந் துள்ளது என்பதை காணமுடியும்.

மக்களவையில் 543 பேரில் 300 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 215பேர்களில் 95பேரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்றால் மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் நடைபெறும் விவாதங்கள் யாருக்காக, யாரை பாதுகாக்க நடைபெறும் என்பதை நம்மால் உணரமுடிகிறது.

நமது நாட்டில் அரசு அமைத்த கமிட்டி கணக்குபடியே 77 சதவீத மக்கள் 20ரூபாய்க் கும் குறைவான தொகை மட்டுமே செலவு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் உலகஅளவில் உள்ள பணக்காரர் களின் பட்டியலில் இந்தியப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பதிவு செய்யப்பட்ட 72கோடி வாக்காளர்களில் 52கோடிபேர் வறுமையில் வாடுகின்றனர். ஆனால் அவர்களின் பிரதிநிதிகள் கோடீஸ் வரர்கள் ஆக உள்ளனர் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ?

வேட்பாளர்கள் வாக்காளர்களை கடவு ளுக்கு சமமாக பார்த்துவந்த காலம் மாறி பணக்காரர்கள் வேட்பாளர்களாக நிற்பதால் பட்டினியின்றி சில நாட்களாவது வாழலாம் என்று மக்கள் சிந்திக்கும் அளவிற்கு வந்து விட்டது. 18வயது முடிந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை என்பது பண ஆதிக் கத்திற்கு முன்பாக கூனிகுறுகி நிற்கிறது. தாராளமய கொள்கையை அமல்படுத்த ஒர் அரசு தேவை. அந்த அரசை தேர்ந்தெடுக்க தேர்தல்களும் தேவை. அந்த தேர்தலில் தாராளமய கொள்கையை ஏற்றுக்கொள்பவர் கள் மட்டுமே வெற்றி பெறவேண்டும். முத லாளித்துவ ஜனநாயகம் அனுமதிக்கப்பட்ட நாடுகளில்கூட ஜனநாயக முறைப்படி தேர் தல் நடைபெறும்போது ஆளும் வர்க்கத்தை தோற்கடித்து சாதாரண மக்களுக்காக போரா டும் இடதுசாரிகளை வெற்றி பெறச்செய்யக் கூடும். அப்படி நடைபெற்ற நாடுகள் உண்டு. 1960ம் ஆண்டு இந்தோனேசியாவில் சுகர் னோ தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ம் ஆண்டு சிலி நாட்டில் அலன்டே தேர்ந்தெடுக்கப்பட் டார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏகாதி பத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.1957ம் ஆண்டு உலகிலேயே கேரளாவில்தான் தேர்தல் மூலம் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் கம்யூ னிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்தது. 1967ல் மீண் டும் ஆட்சியை பிடித்தது. பிறகு கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து ஆட்சி நடை பெறுகின்றது. ஆட்சியை பிடித்த நாடுகளிலும், மாநிலங்களிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு கொள்கைகளை ஓரளவிற்கு அமல்படுத்தவும் முடிந்துள்ளது. இதனால்தான் உலக அளவில் தேர்தல்களில் தலையிட ஏகாதிபத்தியமும், அமெரிக்காவும் முயற்சிக்கின்றன. இடதுசாரிகள் வெற்றி பெறுவதை தடுக்க கீழ்த்தரமான அனைத்து முயற்சிகளிலும் அவை ஈடுபடுகின்றன. இந்த முயற்சிகளை முறியடித்து இடதுசாரி கள் ஆட்சிக்கு வரும்போது அந்த ஆட்சி களை கவிழ்க்கவும் சதிசெய்கின்றன. கவிழ்த் தும் உள்ளன.

தனது இலாபத்தை அதிகப்படுத்த ஏகாதி பத்திய மூலதனம் உலகின் எந்த மூலைக்கும் செல்லும்,எந்த துறையிலும் நுழையும்,எந்த மோசமான வேலைகளில் ஈடுபடவும் தயங் காது என மார்க்ஸ் குறிப்பிட்டார்.

தற்போது நிதிமூலதனத்தின் பங்கு பல மடங்கு பரந்து விரிவடைந்துள்ளது. தங்களது மூலதன வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் எந்த சத்தியையும் மூலதனத்தால் சகித்துக் கொள்ள முடியாது. இதற்கு நமது நாடு சிறந்த உதாரணமாகும். 14 வது மக்களவையில் ஐ.மு. கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு அவசியமானது. அரசு கொண்டு வந்த பல மோசமான பொருளாதார நடவடிக்கைகளை இடதுசாரிகளால் தடுத்து நிறுத்த முடிந்தது.

15வது மக்களவையில் இடது சாரிகளின் ஆதரவு தேவைப்படவில்லை. எனவேதான் தேர்தல் முடிவுகள் வந்ததும், நான் சிறையி லிருந்து விடுதலை பெற்றேன் என்று மன் மோகன்சிங் கூறினார்.அவரைவிட இந்த முடிவை வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளி கள் பெரிதும் வரவேற்றனர்.மோசமான பொரு ளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக இருந்த இடதுசாரிகளின் பலத்தை குறைக்க அவர் கள் பெரிதும் உதவினார்கள்.

1972ம்ஆண்டு இடதுசாரிகளுக்கு எதிராக மேற்குவங்கத்தில் அன்றைய காங்கிரஸ் அரசு அரைபாசிச அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் அதுபோன்ற அடக்குமுறையை தற் போது பயன்படுத்துவது எளிதானதல்ல. தேர் தல் முறைகளில் வந்த மாற்றங்கள்,செய்தி ஒளிபரப்பு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், மக்கள் விழிப்புணர்வில் ஏற்பட்ட மாற்றங்கள், கூட்டணி அரசியலில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றில் இடதுசாரிகளின் பலம் 1972ஐ விட பலமடங்கு அதிகரித்துள்ளது. இடதுசாரி கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை அதி கரித்துள்ளது. இடதுசாரிகளை ஆதரிக்கும் நண்பர்கள் வட்டம் அதிகமாகியுள்ளது.எனவே 1972ம் ஆண்டு முறையை தற்போது பயன் படுத்த முடியாது. எனவேதான் 2009 ஆண்டு தேர்தலின்போது நிதி மூலதனம்,அதன் முழு பலத்தையும் பரவலாக பயன்படுத்தியது. இதனால் 14வது மக்களவையில் இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 15வது மக்களவையில் இருமடங்காக உயர்ந்தது.

தாராளமயக் கொள்கையை ஆளும்வர்க்கம் அமல்படுத்தும்போது வறுமை அதிகரிக்கச் செய்கிறது. அதே வறுமையை தேர்தலில் வெற்றிபெறுவதற்காகவும் பயன்படுத்துகிறது. தேர்தலின் போது பணத்தை வாரி இறைக் கிறது. அதன்மூலம் வாக்குகளை பெறுகிறது. மக்களின் அறிவுத்திறனை ஆக்கிரமிக்கின்ற வகையில் ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தவறான பொய் செய்திகளை வெளியிடுவதற்கு செய்தித்தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. பணம்கொடுத்துசெய்திகள் போடப்படுகின்றன.

தாராளமயக் கொள்கை காலத்தில், பொது வான சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங் களை கொள்ளையடித்து பெரு முதலாளிகள் அவர்களது சொத்து மதிப்பை அதிகப்படுத்தி யுள்ளதும் நடந்துள்ளது.

2010-11ம்ஆண்டிற்கான பட்ஜெட்டில் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்திற்கு மத் தியஅரசு ஒதுக்கிய தொகை 3,90,000 கோடி ரூபாய் எனில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அளித்த தொகை 5லட்சம் கோடியாகும். கிருஷ்ணா, கோதாவரி படுகை யிலிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவின் விலையை குறைத்து நிர்ணயித்ததன் மூலம் முகேஷ் அம்பானி மட்டும் பெற்ற அதிக இலாபம் 65000கோடி ரூபாய். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறைந்தவிலையில் தனியாருக்கு விற்பனை செய்ததுமூலம் அரசுக்கு 60000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. அதைவிட கூடுதல் தொகை தனியார் டெலி காம் கம்பெனி களுக்கு இலாபம் கிடைத்தது. பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுத்து அரசை ஏமாற்றியுள்ளனர். 3கோடி டன் இரும்புதாது வெட்டி எடுக்கப்பட் டுள்ளது. சர்வதேச அளவில் ஒரு டன் இரும் புத்தாது விலை ரூ.4500 இதன் மூலம் ரெட்டி சகோதரர்கள் பெற்ற தொகை ஒரு லட்சத்து 35000 கோடிரூபாய். ஆந்திரமாநிலத்தில் மட்டும் இரும்புத்தாது எடுப்பதற்காக அரசு நிலம் ஒதுக்கியதில் இலட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட, ஏமாற்றி பணம் சம்பாதிக்க சட்டசபைகளில் அவர்களுக்கு பெரும்பான்மை தேவைப்படு கிறது. இனிமேல் பின்னால் இருந்து அரசியல் நடத்தினால் போதாது, சட்டசபையில் நேரடி யாக பங்கு பெற்று தங்களுக்கு சாதகமான சட் டங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என அவர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே அரசியல்வாதி களுக்கும், முதாலளிகளுக்கும் இடையில் சில எல்லை இருந்தன. ஆனால் தற்போது வலிமையான முதலாளிகளே அரசியல்வாதிகள் என்ற நிலை உருவாகி யுள்ளது. அவர்களது பணபலம் ஜன நாயகத்தை மூச்சுத்திணற வைக்கிறது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப் தியை பலவீனப்படுத்த பல்வேறு நலத் திட் டங்களை உருவாக்கப்போவதாக பறைசாற்று கின்றன. அவர்களது தொலைக்காட்சி அலை வரிசைகள் மற்றும் பத்திரிகைகள் வெளி யிடும் கருத்துக்கள் பொதுமக்களின் கருத்து களாக சித்தரிக்கப்படுகின்றன. மக்கள் நம்பும் அளவிற்கு செய்திகள் வெளியிடுகின்றனர். ஜனநாயகத்தை மிகப்பெரும் பாதிப்பிற் குள்ளாக்குகின்ற முறையில் நடந்து, அதுதான் ஜனநாயகம் என சத்தியவாக்காக சொல்கின் றனர். இதை எதிர்க்கும் இடதுசாரிகளை ஜன நாயக விரோதிகள் என முத்திரை குத்துகின்றனர்.

ஆளும் வர்க்கங்களின் இந்த சவாலை எதிர்கொள்ள அவர்களது தவறான, பொய்யான பிரச்சாரத்தை முறியடிக்க,கம்யூனிஸ்ட்களும் இதர ஜனநாயக சக்திகளும் மத நம்பிக்கை உள்ள அதேசமயம் மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றக் கூடிய அனைவரும் ஒன்றுபட்டு, போராடிட வேண்டிய காலம் இதுவே.

தமிழாக்கம் : பி.என்.உண்ணி

ஆதாரம் : சிந்தா. எம்விஎஸ்.சர்மா

No comments:

Post a Comment