Friday, January 7, 2011

உற்சாகம் பொங்கிய உலக மாணவர்-இளைஞர் விழா


-வை.ஸ்டாலின்
“சோசலிசமே எதிர்காலம் - எதிர்காலம் நமதே” என்னும் முழக்கத்துடன், நிறவெறிக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத் திய தென் ஆப்பிரிக்காவில் 17வது உலக இளைஞர்-மாணவர் விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது. மகாத்மா காந்தி தனது அகிம்சை வழி போராட்டத்தை தொடங்கிய அந்த தேசத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு விழாவாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்க நாட்டின் சிறப்பு நடன மான சம்பா நடனத்தோடு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்வுகளுடன் விழா துவங்கியது. தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா துவக்கவுரை நிகழ்த்தி விழாவை தொடங்கி வைத்தார்.

126 நாடுகளிலிருந்து 15,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், அதிமுக, இளைஞர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தென் ஆப்பிரிக்கா விடுதலை பெற்றும் அங்கு கல்வி என்பது தனியார் வசமே உள் ளது. 80 சதமான மக்கள் நிலமற்றவர்களாக உள்ளனர். 60சதமான மக்களுக்கு வீடுகள் இல்லை. ஒரு நாள் பெறும் கூலி ரூ.100தான். தென்ஆப்பிரிக்காவின் விடுதலைப்போராட்ட நாயகனும், அம்மக்களால் போற்றப்படுகின்ற நெல்சன் மண்டேலாவின் கனவு, எதிர்வரும் காலத்தை சோசலிசத்தை நோக்கி அழைத் துச் செல்வதுதான் என்று அம்மக்கள் நம்பிக் கையுடன் உள்ளனர். அம்மக்கள் மகாத்மா காந் தியை எளிய மனிதர் - பெரிய இதயம் படைத் தவர் என்று போற்றுகிறார்கள்.

உலகம் முழுவதும் இளைஞர்கள் உரி மைக்காகவும் கல்வி பாதுகாப்புக்கும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்கல்வியான பொறி யியல், மருத்துவம், ஐ.டி.சாப்ட்வேர் கல்வியை அரசே நடத்த வேண்டும் என்றும் இவ்விழா வலியுறுத்தியது. இலவசக்கல்வி, நிலங்களை அரசுடைமை ஆக்குவது, இளம்பெண்கள் - இளைஞர் உரிமையை பாதுகாப்பதற்காகவும், ஐ.டி.துறையில் பணிப்பாதுகாப்பு இல்லாத நிலைமையும் பாலியல் தொந்தரவும் இருந்து வருகிறது. இதற்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர் அமைப்புகள் எழுச்சிமிக்க போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இவ்விழா கேட்டுக் கொண்டது.

பன்னாட்டு கம்பெனிகளின் நிதி மூல தனம் உலகம் முழுவதும் பல்வேறு முதலீடு களை தொழில் தொடங்குவதற்காக செய் கிறது. இதில் இயந்திரங்கள் பங்கு முக்கிய மானதாகவும் மனித உழைப்பு பின்னதாகவும் காணப்படுகிறது. பல வெளிநாட்டு கம்பெனி கள் மக்களுக்கு வேலை தருகிறோம் என்று தொழில் தொடங்குகின்றன. ஆனால் அதற்கு வாய்ப்பற்ற சூழல்தான் நிலவுகிறது. கம் பெனிகள் அரசோடு சமரசம் செய்துகொண்டு நிலம், மின்சாரம் உள்ளிட்ட அரசு சலுகை களை பெறுகின்றன. இந்த கொள்ளைக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் உரிமை யை பாதுகாக்கவும் ஒரு பெரும் போராட் டத்தை இளைஞர்களை திரட்டி நடத்த இவ்விழா அறைகூவல் விடுத்தது.

கியூபா, வியட்நாம், வடகொரியா, சீனா போன்ற நாடுகளில் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கல்வி தனியாரிடம் இருக்கிறது. 8 கோடி மக்கள் கொண்ட வியட் நாம் நாட்டில் இலவச கல்வி வழங்கப்படு கிறது. 6 கோடி மக்கள் உள்ள ஜப்பானில் கல்வி உதவித்தொகை இல்லை. இதற்கு எதிராக அங்குள்ள மாணவர்கள் கடுமையாக போராடுகிறார்கள். உலக மாண வர்-இளைஞர் விழா எதிர்வரும் காலத்தில் இலவச கல்வியை அனைத்து நாடுகளும் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டத்தை கொண்டு செல்வது என்றும் முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, உலக அமைதிக்காகவும் ஜனநாயகம் என்ற பெயராலும் அத்துமீறி மற்ற நாடுகள் மீது போர் தொடுத்து உலக மக்களை வஞ்சித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு வேலையும் கல்வியும் கேள்விக் குறியாக மாறுகிறது. ஆனால் அமெரிக்கா தம் நாட்டை பார்க்காமல் ஆப்கான், பாகிஸ்தான், ஈரான், பாலஸ்தீனம், வடகொரியாவுக்கு எதிராக ஆயுத விற்பனையை செய்து வருகிறது. சின்னஞ்சிறிய நாடான கியூபா, அமெரிக்காவுக்கு அடிபணியாமல் சோசலிச முழக்கத்தையும் உலக அமைதிக்கான குரலையும் ஓங்கி முழங்குகிறது. ஆயுதங்களை விற்று போர்களை ஏற்படுத்தி ஒரு ஏகபோகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடுமானால் உலக நாடுகள் அதனை பின்னுக்குத் தள்ளும் என்று உலக மாணவர் - இளைஞர் விழா எச்சரித்துள்ளது.

கட்டுரையாளர், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மதுரை மாநகர்.

No comments:

Post a Comment