Friday, December 31, 2010

மார்க்சிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து


தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு:-

தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரி வித்துக்கொள்கிறோம்.

உலக அளவில் முதலாளித்துவத் திற்கு ஏற்பட்ட நெருக்கடியால் சிக்கித் திணறிய ஆண்டாக விடைபெற்றுச்செல் லும் 2010 அமைந்தது. மனித குலத்தின் இன்னல்களுக்கு முதலாளித்துவத்தால் ஒருபோதும் தீர்வுகாண முடியாது என்பதை சர்வதேச அளவில் எழுந்த நிதி நெருக்கடி அழுத்தமாக உணர்த்தியுள்ளது. உலகமயத் திற்கு எதிரான போராட்டம் உலகில் பல் வேறு நாடுகளில் வெடித்துக்கிளம்பியுள் ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. சமத் துவ உலகை நோக்கி அழைத்துச்செல்லும் சோசலிசப் பாதையை அமைப்பதற்கான போராட்டத்தை வேகமாக நடத்துவதற் கான வெளிச்சத்தை பூக்கும் புதிய ஆண்டு தரட்டும்.

மத்திய அரசின் தாராளமயக் கொள்கை யால் அனைத்து அத்தியாவசியப் பொருட் களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. முன்பேர வர்த்தகம் உள்ளிட்ட இந்த அரசின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணமாகும். சுதந்திர இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல்கள் அணிவகுத்து ஊர் வலம் நடத்திய ஆண்டாக 2010 அமைந் தது. காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழல், கனிமவளக் கொள்ளை, இதற்கெல்லாம் மகுடம் வைத் தது போல் அமைந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவற்றால் பல லட்சம் கோடி ரூபாய் கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழலில் சிக்கிய தொகையை நலத்திட் டங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் மக் கள் வாழ்வை மேம்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஏழை-எளிய மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் அமெரிக்க வல்லர சிற்கும், பன்னாட்டு, உள்நாட்டு பெருமுத லாளிகளுக்கும் சேவகம் செய்யும் அரசாக மன்மோகன் சிங் அரசு உள்ளது.

வகுப்புவாத சக்திகள் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக தொடர்ந்து நீடிக்கிறது. இக் காலத்தில் நடைபெற்ற பயங்கரவாத நட வடிக்கைகள் வகுப்புவாதத்தின் கோரமான முகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியது. பெரும்பான்மை வகுப்புவாதம், சிறுபான் மை வகுப்புவாதம் இரண்டும் தேசத்திற்கு ஆபத்தானவையே. மக்களின் நலன்களுக் கும் முன்னேற்றத்திற்கும் கேடு விளைவிக் கும் தாராளமய பொருளாதாரக் கொள்கை களுக்கு எதிராகவும், வகுப்புவாதத்திற்கு எதிராகவும் மக்களின் மகத்தான ஒற்று மையை உருவாக்குவதில் புத்தாண்டு புதிய வரலாறு படைக்கட்டும்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, தமிழகத்தில் மத்திய அரசின் அதே தவறான பொருளாதாரக் கொள்கையைத் தான் தடம் புரளாமல் பின்பற்றுகிறது. மக்க ளின் வாழ்வில் அடிப்படையான மாற்றங் களை ஏற்படுத்தும் திட்டங்களை செயல் படுத்துவதற்கு பதிலாக கவர்ச்சித்திட்ட அறிவிப்புகள் மூலம் கண்கட்டு வித்தை செய்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு மனைப்பட்டா, நிலமற்ற ஏழை விவசாயி களுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத் தவில்லை. கல்வி, மருத்துவம் போன்ற துறைகள் தனியாரின் கொள்ளைக்கு முற்றாக திறந்துவிடப்பட்டுள்ளது. மாநில உரிமைகள் மத்திய அரசினால் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. இதை கண்டிக்க திமுக அரசு தயாராக இல்லை.

தீண்டாமைக் கொடுமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்க ளில் இன்னமும் தொடர்கிறது. பெண் களுக்கு எதிரான வன்முறைகள் சமூக அளவிலும் குடும்ப அளவிலும் தொடர் கிறது. மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை ஆக்க வேண்டும் என்ற கோரிக் கையும், உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக் கையும் மத்திய அரசினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றிற் கெல்லாம் மாற்றம் காண புத்தாண்டில் முன்னிலும் முனைப்பான முயற்சிகளை மேற்கொள்வோம்.

வாழ்வில் எவ்வளவு துன்ப துயரங்கள் சூழ்ந்தாலும் வரும் காலத்தை நம்பிக்கை யோடு எதிர்கொள்வதே மக்களின் இயல்பு. அந்த வகையில் மக்கள் வாழ்வில் மாற்றம் காண நாட்டின் நலிவு நீங்கிட, மாநில உரி மைகள் ஓங்கிட, தொழிலாளர்களின் உரி மைகள் நிலைத்திட போராட்டக்களங்கள் மேலும் மேலும் விரிகிற ஆண்டாக 2011 அமையட்டும் என வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment