Wednesday, October 20, 2010

அனைத்து வகையிலும் வளமான சீனா: இலக்கு நிர்ணயித்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி

அனைத்து வகையிலும் வளமான சீனா என்பது இலக்கு என்றும், அதை நோக்கிய பாதையை அமைக்க 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு குறிப்பிட்டுள்ளது.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி யின் 17வது மத்தியக்குழுவின் ஐந்தாவது பிளீனக்கூட்டம் பெய்ஜிங்கில் நிறைவு பெற் றுள்ளது. 12வது ஐந்தாண் டுத்திட்டம் பற்றி இந்தக் கூட்டத்தில் விரிவாக விவா திக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் சர்வதேசச் சூழல் களுக்கு ஏற்பவும், மக்களின் புதிய எதிர்பார்ப்புகளைக் கணக்கில் கொண்டும் அவர் களின் மேம்பட்ட வாழ் வுக்கு வழி காண வேண்டும் என்று கட்சியின் மத்தி யக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் சீர் திருத்தங்கள் மற்றும் நாட் டின் பொருளாதார மேம் பாட்டு முறையில் மாற்றங் கள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டிய காலத்தில்தான் 2011-15ம் ஆண் டுகளுக்கான ஐந்தாண்டுத் திட்டம் முன்னிற்கிறது. முக் கியமான காலகட்டத்தில் இருக்கும் சீனா ஏராளமான சாதனைகளைப் படைக் கும் வாய்ப்பும் உருவாகி யுள்ளது. நாம் எதிர்பாராத ஆபத்துகள் மற்றும் சவால் களும் இருக்கும் அதே நேரத்தில் வரலாறு காணாத வாய்ப்புகள் நம் முன் இருக் கின்றன என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

கட்சியே அடிப்படை உத்தரவாதம்

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் பொருளா தார மற்றும் சமூக வளர்ச் சித் திட்டத்தின் இலக்கு களில் அடைவதற்கு அடிப் படையான உத்தரவாதமே சீனக்கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமைப் பாத்திரம் தான் என்று மத்தியக்குழு உறுதியாகத் தெரிவித்துள் ளது. கட்சியின் ஆட்சித் திறனை மேம்படுத்தவும், கட்சியின் முற்போக்கு சிந் தனையை வளப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை களை எடுக்கக் கட்சி திட் டமிட்டுள்ளது. இவற்றைப் பலப்படுத்துவதன் மூலமாக நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும் திற னைக் கட்சி மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று கட்சி கருதுகிறது.

மூன்று அம்ச உத்தி

இந்தியா போன்ற நாடு களைப் போல ஏற்றுமதி யை மையமாகக் கொண்டு தனது வளர்ச்சியை சீனா திட்டமிடவில்லை. எத்த கைய வளர்ச்சியை நோக் கிப் போக வேண்டும் என்ப தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு தெளிவாக உள்ளது. நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதி ஆகிய மூன்றிலும் முன்னேற்றம் காண்பதன் மூலமே வளர்ச் சியின் தன்மையை சீராக வைத்திருக்க முடியும் என் கிறது மத்தியக்குழு. முத லீட்டிற்கான கட்டமைப்பு, உள்ளூர் நுகர்வை மேம் படுத்த தொலைநோக்குத் திட்டம் என்று புதிய பணிக ளில் கட்சி இறங்கியுள்ளது.

நகர்ப்புற மற்றும் கிரா மப்புற பொருளாதாரங் களுக்கு இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதையும் தங்கள் இலக்காக எடுத்துக் கொண் டிருக்கிறார்கள். குறிப்பாக, விவசாயிகளின் வருமா னத்தை அதிகரிப்பது பிர தானப் பணியாகிறது. கிரா மப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென் றால் விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி யது தவிர்க்க முடியாத தாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிய கேந்திரத் தொழிற் சாலைகளை உருவாக்கப் போகிறார்கள். மாற்று எரிசக்தி, உயிரியல் தொழில் நுட்பம், புதிய தலைமுறைத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர்தொழில் நுட் பத்துடனான உற்பத்தி ஆகி யவற்றில் புதிய கட்டத்திற்கு சீனா முன்னேறப்போகிறது.

2020 ஆம் ஆண்டில் நாட் டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் இத்தகைய புதிய தொழில்களின் பங்கு 15 விழுக்காடாக இருக்கும் என்பது சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமாகும்

No comments:

Post a Comment