Sunday, December 5, 2010

1.76 லட்சம் கோடியை மீட்க வேண்டும்:காரத்



  - பிரகாஷ் காரட்

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் நடந்துள்ள ஊழல் இந்திய வரலாற்றில் மிகப் பெரும் ஊழல் என்றும், சுதந்திர இந்தியாவில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு எண்ணிப்பார்க்க முடியாத விதத்தில் நடந் துள்ள இந்த ஊழலில் முழு உண்மைகளை யும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தியே தீர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார். மேலும் ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீட்டில் அரசு இழந்த ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முழுமையாக மீட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், மும்பையில் கார்கில் வீரர்களுக்கு கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் ஊழல் என வரலாறு காணாத ஊழல்களை காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு செய்து சிக்கியுள்ளது. அதே நேரத்தில், கர்நாடகத்தில் கனிமக்கொள்ளை மற்றும் நில ஊழல் உட்பட அனைத்துவிதமான ஊழல்களின் பிறப்பிடமாக எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மாறியுள்ளது. காங்கிரஸ்-திமுக-பாஜக ஆகிய கட்சிகளின் மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு இதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத விதத்தில் நடந்துள்ள 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் தொடர்பாக முழு உண்மை களையும் கண்டறிய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண் டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன. நாடாளுமன்றம் கடந்த 16 நாட் களாக ஸ்தம்பித்துள்ளது.

இந்தப்பின்னணியில் காங்கிரஸ்-திமுக-பாஜக ஆகிய கட்சிகளின் ஊழல்களை அம் பலப்படுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி டிசம்பர் 5ம் தேதி ஞாயிறன்று நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை துவக்கி யது. டிசம்பர் 11 வரை ஒருவார காலம் நடை பெறும் இந்தப்பிரச்சாரம், தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறுகிறது.

ஞாயிறன்று மத்தியபிரதேச தலைநகர் போபாலில் பிரச்சார இயக்கத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “ 1 லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என் பது சுதந்திர இந்தியாவில் மிகமிகப்பெரியது. இது தொடர்பான முழு உண்மையும் வெளி வர வேண்டும் அதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடந்தாக வேண்டும்” என்று கூறினார். சட்டவிரோதமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு கம்பெனி கள், அடுத்த ஓரிரண்டு மாதங்களிலேயே அதை சட்டவிரோதமாக விற்று மிகப்பெரும் கொள்ளை லாபத்தை ஈட்டியிருக்கின்றன எனக்குறிப்பிட்ட பிரகாஷ் காரத், இந்த விவ காரத்தில் உரிய விசாரணை நடத்துவதில் மத்திய புலனாய்வுக்கழகம் மிகமிக தாமதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். கடந்த 13 மாதங்களாக இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் எதுவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய அவர், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையே இதற்குத் தீர்வு என்றும் கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் அம் பலமான பின்னரும் அத்துறையின் அமைச் சராக இருந்த ஆ.ராசா, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு 3 ஆண்டு காலம் எடுத் துக்கொண்டார் எனச்சாடிய பிரகாஷ்காரத், 2007லேயே பிரதமர் இதுகுறித்து ராசாவுக்கு கடிதம் எழுதியும் கூட அவர் அதை ஏற்றுச் செயல்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி னார். கடும் நிர்ப்பந்தத்திற்குப் பிறகு ராசா பதவி விலகினாலும், இந்த ஊழல் தொடர்பான முழு உண்மைகள் நாட்டு மக்களுக்கு தெரிந் தாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஊழல் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா, புதுதில்லி உட்பட நாட்டின்அனைத்து பகுதிகளிலும் ஞாயி றன்று துவங்கியது. தெருமுனைப்பிரச்சார கூட்டங்கள், பேரணிகள், தர்ணாக்கள், பொதுக்கூட்டங்கள் என இப்பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் ஞாயிறன்று பல்லாயிரக் கணக்கான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் செங்கொடி ஏந்தியும், ஊழல் எதிர்ப்பு பிர சுரங்களை மக்களுக்கு விநியோகித்தும் பிரச் சாரத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங் களில் தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற் றன. இப்பிரச்சார இயக்கத்தையொட்டி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரசுரங்களையும் மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment