| இரண்டாவது உலகமகா யுத்தம் துவங்கியதும் யுத்த எதிர்ப்பு பிரச் சாரத்தில் கம்யூனிஸ்டுகள் ஈடுபட்ட னர். கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்படும் தொழிற்சங்கங்களும் யுத்த எதிர்ப்பில் களம் குதித்தன. ரயில்வேயில் இப்பணி சற்று கூடுத லாகவே இருந்தது. இதன் விளைவாக கல்யாணசுந்தரம் உட்பட முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட னர். தோழர் எஸ்.பரமசிவம் தற் காலிக பொதுச் செயலாளர் ஆனார். யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் மேலும் தீவிரமானது. வெள்ளைக்கார அரசு மிரண்டது. 1941ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் தடுப்புக் காவல் சட்டத்தில் எஸ். பரமசிவம் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் அடைக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குள்ளாகவே பரமசி வம் கடுமையான காய்ச்சலால் பாதிக் கப்பட்டார். சிறை மருத்துவமனை யில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன்தரவில்லை. காய்ச்சல் முற்றியது. ஜன்னி ஏற்பட்டது. டைபாய்டு காய்ச் சல் எனக் கூறப்பட்டது. ஆயினும் சிறை நிர்வாகம் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்ட சகதோழர்கள் போராடினர். விளைவு, அவர் வேலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நோய் முற்றிவிட்டதால் சிகிச்சை பலன் தரவில்லை. நவம்பர் 6ஆம் நாள் மரணமடைந்தார். அவரை சிறைக்குள்ளேயே புதைக்கவே சிறை நிர்வாகம் முயன் றது. கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்க ளும் வேலூர் நகர காங்கிரஸ் தலைவர் களும் சிறைவாசலில் போராடி உடலைப் பெற்றனர். குடும்பத்தினரி டம் ஒப்படைத்தனர். ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவர் உடல் எரியூட்டப்பட்டது. இது ஏதோ பரமசிவத்தின் உடல் கோளாறு கார ணம் என்று கருதிவிட முடியாது. அன்று சிறை மிகக் கொடுமையாக இருந் ததன் விளைவே இந்த மரணம். இதேபோல் நெல்லை சதிவழக் கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட தேசபக்தர் அருப்புக்கோட்டை சோமசுந்தரமும் சிறையில் நோய் வாய்ப்பட்டார். நீண்டநாள் நோயால் வதைபட்டார். உரிய சிகிச்சையை சிறை நிர்வாகம் வழங்காததால் அங்கேயே மரணமடைந்தார். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? மருத்துவ காரணங்க ளுக்காக அவரை விடுதலை செய்வ தாக சிறை நிர்வாகம் அன்று அறிவித் தது. ஐந்து மைல் சுற்றளவு கொண்ட அலிப்புரம் சிறை என்றழைக்கப் பட்ட பெல்லாரி சிறை கொடுமை யின் மாதிரியாகும். சிறைக்கொடுமை யின் உச்சம் அந்தமான் எனில் அதற்கு சற்றும் சளைக்காதது பெல்லாரி. சிறைக்குள்ளும் தண்ணீர் பற்றாக் குறை. குளிக்க தண்ணீர் வாரம் ஒரு முறை கிடைப்பது கூட அரிது. அங்கு எவ்வளவு தண்ணீர் பஞ்சம் நிலவியது என்பதை அந்தச் சிறையில் கைதியாக அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டு தலைவர் வி. கார்மேகம் கூறுவதை என். ராமகிருஷ்ணன் மேற்கோள் காட்டுகிறார், “அச்சமயத்தில் பெல்லாரி சிறை யில் கடுமையான தண்ணீர் பஞ்சம் சிறையில் தண்டிக்கப்பட்ட கைதிகள் ஒவ்வொருவருக்கும் ஐந்து அல்லது ஆறு கோப்பைகள் தண்ணீர்தான் தருவார்கள். துணியைத் துவைத்துப் போடுவது என்பது இயலாத காரியம். எனவே, நாங்கள் கோவணத்தைக் கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டியிருந்தது. பி. ராமமூர்த்தியும் கோவணத்தைக் கட்டிக்கொண்டு தான் இருந்தார். ஆயினும் அதே கோலத்தில் அரசியல் வகுப்புகள் நடத்துவார்.” அதே சிறையிலிருந்த கம்யூனிஸ்ட் தேசபக்தர் எம்.எஸ். அய்யம்பெரு மாள் ஒரு கொடூரமான அடக்குமுறையை விவரித்துள்ளார். இதையும் என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். அரசியல் கைதிகள் மோசமாக நடத்தப்பட்டதை எதிர்த்து பல முறை சிறைக்குள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது குறித்து அவர் கூறுகிறார், “ரகசியமாக வைத்திருந்து ஒரு நாள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம். இரண்டாம் நாள் அதிகாரிகளின் அடக்குமுறை தாண்டவமாடியது.” “தலைவர் கல்யாண சுந்தரத் தையும், கேரளத் தோழர் மொயாத் சங்கரன் அவர்களையும் தனிமைப் படுத்தினார்கள். பெரிய பெரிய அண்டாக்கள் இரண்டில் தண்ணீரை நிரப்பி அவைகளை வாரைத்தடியைக் கொண்டு தலைவர் எம். கல்யாண சுந்தரத்தையும் மொயாத்தையும் தூக்க வைத்தனர். அதுமட்டுமல்ல, பிளாக் முழுவதையும் கழுவச் செய்த னர். இடையிடையே தலைவர்களை அடித்துத் துன்புறுத்தினர். அடித்து கீழே தள்ளி வார்டர்களை மேலே ஏறிமிதிக்கச் செய்தனர். காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த சித்திர வதை பகல் ஒன்றரை மணி வரை நீடித் தது. இந்தக் கொடுமைக்கு எல்லையே இல்லையா என்று நாங்கள் கண்ணீர் மல்கி இருந்தோம்... தலைவரையும் மற்றும் 70 பேர்களையும் குவாரன் டைனில் அடைத்துவிட்டனர். அப் போதும் போராட்டம் ஓயவில்லை. குவாரன்டைனிலும் 13 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தலைவருக்கு ரத்தக்காய்ச்ச லும் மற்றும் சிலருக்கு பெரியம் மையும் ஏற்பட்டன.” போராட்டத்திற்கு சிறிய வெற்றி கிடைத்தது. சிறைக்குள் உலவ சற்று சுதந்திரம் கிடைத்தது. சிறைக்குள் சோம்பிக்கிடக்காமல் அரசியல் வகுப் புகள், இலக்கிய வகுப்புகள், பாடல் கள், பயிற்சி என பயனுள்ள முறையில் கழித்தனர். விடுதலைக்கு முன்பு மட்டுமல்ல, விடுதலைக்குப் பின்னும் சிறைக் கொடுமைகள் தொடரவே செய்தன. கம்யூனிஸ்ட்டுகள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறைக்கு களப் பால் குப்பு, சேலம் சிறைத்தியாகிகள் என எண்ணற்ற உதாரணம் சொல்ல முடியும். ஏ.கே. கோபாலன் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அதே சிறையில் சிறைப்பட்டி ருந்த திமுக கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டித்து போராடினார்கள் என்பது வரலாறு. ஆசைத் தம்பியின் தலையை சிறை நிர்வாகம் மொட்டையடிக்க முயன்ற போது அதைத் தடுத்து நிறுத்தியவர் ஏ.கே. கோபாலன். இந்திராகாந்தி கொணர்ந்த அவசர காலத்தில் மிசா கைதிகளாக கம்யூனிஸ்ட்டுகளும், திமுகவினரும் ஒன்றாக சிறைப்பட்டனர். சிறையில் சாகடிக்கப்பட்ட சிட்டிபாபுவின் டைரி அந்த சிறைக் கொடுமைக ளைச் சொல்லும். அப்போதும் சிறை யில் மனித உரிமைகளுக்காக போராடி திமுகவினருக்கும் உரிமைகளும் சலுகைகளும் பெற்றுத் தந்தது கே.எம். அரிபட்டும், து.ஜானகிராம னும்தான். அன்று ‘மிசா’ பட்டத்தை பெருமையோடு தன் அடை மொழியாக்கிக்கொண்ட திமுகவினர், காங்கிரஸ் உறவுக்காக அதைத்தூக்கி எறிந்துவிட்டனர். சிட்டிபாபுவின் டைரியை மறந்துவிட்டனர். ஆனால் வரலாறு அதனை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். திமுக மேடையில் “பாளையங் கோட்டை சிறையிலே பாம்புகள் பல் லிகள் நடுவினிலே” எனத் தொடங் கும் பாடல் ஒன்று ஒலிபரப்பப்படும். அப்பாடல் கருணாநிதி சிறையில் பட்ட வேதனையை தியாகத்தைப் போற்றும். கருணாநிதி எழுதிய “நெஞ்சுக்கு நீதி” வாழ்க்கை சரிதத்தில் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கும். அதில் அவர் ஒரு செய்தியைக் குறிப் பிட்டிருப்பார். கருணாநிதி அந்தச் சிறைக்குப் போவதற்கு முன்பே தோழர் பி. ராமமூர்த்தி அங்கு சிறை வைக்கப்பட்டிருந்தார். கருணாநிதி விடுதலை ஆனபின்னர் பல மாதங்கள் கழித்தே தோழர் பி. ராமமூர்த்தி விடுதலை செய்யப்பட்டார். இந்த விபரம் நெஞ்சுக்கு நீதி நூலில் கருணா நிதியே எழுதி உள்ளார். தியாகத்தால் புடம் போடப்பட்ட கம்யூனிஸ்டுகள் வாழ்க்கை போராட் டம் இன்னும் வலுவாய் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்க வேண் டுமோ? தியாகத்தை பேசிப்பேசி தன்னை பெரும் தலைவராகக் காட்டிக்கொள் ளாதவர்கள் கம்யூனிஸ்டுகள். தியா கத்தை உரக்கச் சொல்லிச் சொல்லி ஆட்சியை பிடித்துவிட்டது திமுக. இப்போதோ ஊழலுக்கு சிறை போன தெல்லாம் தியாகமாகிவிட்டது... நிலைமை மேலும் மோசமாகி சினி மாவில் சிறைப்பட்டதெல்லாம் அரசிய லில் மூலதனமாகிக் கொண்டிருக் கிறது. எனவே கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லியாக வேண்டி உள்ளது. அது இருக்கட்டும்... தமிழக சட்டப்பேரவையில் தலைவர்கள் வரிசையில் தோழர். பி. ராமமூர்த் திக்கு ஏன் படம் வைக்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர், தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவ ராக இருந்தவர். அவர் படம் இடம் பெறுவது எந்நாளோ? |
Sunday, November 21, 2010
பாம்புக்கும் பல்லிக்கும் நடுவிலே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment