Sunday, November 7, 2010

ஆஹாவென எழுந்தது...!


russian revolution 1 பூமிப்பந்தின் மையப்பகுதியில் அந்த அற்புதம் 82 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மூலதனத்தை விட உழைப்பைக் கொண்டாடுகிற அமைப்பாக ஒரு அரசு எழுந்தது. அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம், வேலை என்பதே அதன் லட்சியமாக இருந்தது. மூன்றாம் உலகநாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நின்றது.
தர்மத்தின் வாழ்வுதனை கவ்விய சூதுவாய் சோஷலிச ஆட்சி அகற்றப்பட்டது. ‘காற்றில் கலப்படம் வந்தது என்பதால் காற்றையே வேண்டாமென்று எவன் சொல்வான்?’ என்னும் கந்தவர்னின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.
இன்று பிச்சை எடுக்கிறவர்களை, திருடுகிறவர்களை, அனாதைகளை சோவியத் நாடுகளின் தெருக்களில் ‘சுதந்திரமாக’ பார்க்க முடிகிறது. தனக்கு நிகர் இல்லையென அமெரிக்கா கொம்பு முளைத்து எல்லோரையும் முட்டி மோதிக்கொண்டு நிற்கிறது.
இருக்கட்டும். இன்னும் அந்தக் கொடி நிகழ்காலத்தின் நிறமாக, எதிர்காலத்தின் நம்பிக்கையாக உலகெங்கும் பறந்துகொண்டுதான் இருக்கிறது.
நவம்பர் புரட்சி தினத்தை நினைவில் நிறுத்துவோம்!

No comments:

Post a Comment