Thursday, October 14, 2010

நீதிமன்றத் தீர்ப்பு ‘நம்பிக்கை’ அடிப்படையில் இருக்க முடியாது!


-சீத்தாராம் யெச்சூரி
அயோத்தியா பிரச்சனைக்கான தீர்ப்பு, சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை யினை உயர்த்திப் பிடிக்கவேண்டுமே தவிர, நம்பிக்கையின் அடிப்படையிலான சட்டமாக அதை மாற்றிவிடக்கூடாது.

மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள அனைத்தையும் மக்கள் மறுகேள்வி யின்றி சட்டமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று இதற்கு பொருள் கொண்டுவிடக்கூடாது. கடந்த 60 வருடங்களாக பாபர் மசூதி- இராமர் கோவில் தொடர்பான சர்ச்சைக்குரிய நிலத் தின் உரிமை குறித்த ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. இந்தப்பின்னணி யில், நம்பிக்கையின் அடிப்படையில் அலகா பாத் (லக்னோ கிளை) உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. எனவே, பலரும் இந்தத் தீர்ப்பினை ஒரு அரசியல் மத்தியஸ் தமாகத்தான் பார்க்கிறார்களே தவிர, இதை ஒரு சட்டத்தின் அடிப்படையிலான நீதிமன் றத் தீர்ப்பாகக் கருதவில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடுகள் செய்யப்படுவது உறுதி.

அத்வானியின் அவக்கேடான ‘இரத யாத்திரை’ அதைத்தொடர்ந்து கலவரங்கள், இரத்தக்களறிகள் என இறுதியில் அவை யெல்லாம் பாபர் மசூதி இடிப்பில் முடிந்தன. அதே அத்வானி இப்போது மார்தட்டுகிறார். “இன்று சூழ்நிலை சட்டமா நம்பிக்கையா என்பதல்ல; சட்டமே நம்பிக்கையினை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான்”

இரண்டும் ஒன்றல்ல!

மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்காலம் முழுவதும், கட்டுக்கதைகளுக்கும், வரலாற் றிற்கும், மத சாஸ்திரங்களுக்கும் தத்துவ ஞானத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மோதல்களிலேயே முடிந்திருக்கின்றன. புனைவுகள் பல வரலாற்று உண்மைகள் போல எளிதாக மாற்றப்பட்டதாலேயே அவை பல தேசங்கள் அமைவதற்கான கருத்துருக்க ளின் அடிப்படையாகக் கூட அமைந்தன. புனைவுகள் பல உண்மையில் எதார்த்தத் திற்கு புறம்பானவை. எனினும், அவை எதார்த்தம் போன்ற ஒரு விநோதமான குணாம்சத்தினை சுவீகரித்துக் கொள்கின் றன. இது புனைவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்த பிரபல எழுத்தாளர் கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் முடிவு.

புனைவு என்பது வரலாறு குறித்த மக்க ளின் ஒட்டுமொத்த நினைவுத் தொகுப்பே என்ற ஒரு பொதுவான கருத்து உண்டு. ஆனால் இதை மறுக்கும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எரிக்ஹாப்ஸ்பாம் “மக்கள் தொடர்ச்சியாக ஒன்றை நினைவில் வைத்துக் கொள்கிறார் கள் என்பது உண்மையல்ல; தொடர்ந்து மக் களை சிலர் நினைவுபடுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பதே உண்மை” எனக்கூறுகி றார். எனவே ஒரு குறிப்பிட்ட அரசியல் ஆதா யத்தினை அடைவதற்காக மக்களுடைய உணர்வுகளை சிலர் தூண்டுகிறார்கள் என்பதே உண்மை.

ஒரு நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசில் இதுபோன்ற பிரச்சனைகள் அரசி யல் களத்திலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண் டும். நீதிக்களம் என்பது சாட்சியங்கள், தக வல்கள், சட்டநுணுக்கங்கள் சம்பந்தப்பட்ட வை. கண்டிப்பாக நம்பிக்கைகள், அனுமா னங்கள் போன்றவைகளுக்கு அங்கு இடமில் லை. சமன் செய்த தராசுகளுடன் கண் களைக் கட்டிக்கொண்டிருக்கும் பெண். இதுவே உலக நாடுகள் பலவற்றில் நீதி தேவதையின் அடையாளம். அதாவது, நீதி மன்றத்திற்கு வருபவர்களின் அரசியல் பலா பலங்கள், அவர்களின் சமூகப்பின்புலம் என்ப தெல்லாம் நீதியின் எல்லைக்கு அப்பாற் பட்டவை. அரசியல் சாசனத்தின் அடிப் படையில் நாட்டில் அமலில் இருக்கும் சட்டங்கள் மட்டுமே நீதியின் அடிப்படையாக அமையும் என்பதே இதன் பொருள் விளக்கம்.

எழுகின்ற கேள்விகள்!

இயல்பாகவே இந்தத்தீர்பபு பல கருத்தாழ மிக்க சில கேள்விகளை எழுப்புகிறது. எடுத் துக்காட்டாக, பாப்ரி மசூதி இடிபடாமல் இன்று வரை அப்படியே இருந்திருந்தாலும் தீர்ப்பு இப் படித்தான் இருந்திருக்குமா? இந்த நீதிமன் றத்தில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யப் படும்போது, பாப்ரி மசூதி இடிபடாமல் அதே இடத்தில் அப்படியே இருந்தது என்ற உண் மையின் பின்னணியில், இந்தக்கேள்வி முக் கியத்துவம் பெறுகிறது. அப்படியானால் இந் தத்தீர்ப்பு மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்ப டுத்துகிறதா? மசூதி இடிக்கப்பட்டது அனை வராலும் கண்டனம் செய்யப்பட்டது. அரசியல் சாசனச் சட்டத்தின் அடிப்படை அம்சம் என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக் கும் மதச்சார்பின்மையினை உருக்குலைத்த கொடுஞ்செயல் அது. பாப்ரி மசூதி இடிப்பிற்கு கரசேவகர்களைத் திரட்டிய சில மாநில அரசுகளை, அன்றைய நரசிம்மராவ் தலை மையிலான மத்திய அரசு கலைத்தபோது, இந் தக்கருத்தின் அடிப்படையில்தான், உச்சநீதி மன்றம் ஆட்சிக்கலைப்பினை ஏற்று உத்தர விட்டது. 1949 டிசம்பர் 22-23 நள்ளிரவில், பாபர் மசூதியின் கவிகை மாடத்தில் இராமர்-சீதை சிலைகளை 50-60 பேர் திருட்டுத் தனமாக உள்ளே கொண்டு வைத்தார்கள். அவர்கள் மீது அந்தப்போலீஸ் சரகத்தை சார்ந்த அன்றைய இன்ஸ்பெக்டர் ராம் துபே பதிந்த முதல் தகவல் அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை? அதற்கு பின்னர் மசூ தியை பூட்டியது. அதற்கு வெகு காலத் திற்குப்பின்னர் கதவுகளை மீண்டும் திறந்துவிட்டது- இவை குறித்தெல்லாம் 1994ல் இந்திய அரசு மீது இஸ்மாயில் பரூக்கி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே “நம்பிக்கை” மற்றும் “அனுமானங்களின்” மீது நீதிமன்றங்கள் தீர்ப்புக்கூற முடியுமா என்ற கேள்விகள் மேலோங்கி நிற்கின்றன.

தென் ஆப்பிரிக்க அனுபவம்!

இந்தத்தீர்ப்பிற்குப் பின்னர் கீச்சொலிகள் சில கேட்கத் தொடங்கியிருக்கின்றன. முஸ் லிம்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் மூன்றிலொரு பங்கு நிலத்தினையும் விட்டுக் கொடுத்து “ஒரு பிரம்மாண்டமான கோயில்” கட்டும் பணியில் ஒத்துழைப்பதன் மூலம் தங்களது இணக்கத்தினை வெளிப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடப்படுகிறது. சமாதானம் என்ற பெயரால் மீண்டும் மதரீதி யான திரட்டலுக்கு திட்டமிடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி அரசு நீக்கப்பட்ட பின்னர், மண்டேலா அரசுக்கு சமாதானத் தினை உருவாக்கும் பிரச்சனை ஏற்பட்டது. நிறவெறிக் கொடுமைகள் புரிந்தோருக்கும், கொடுமைகளுக்கு ஆளானோருக்கும் இடை யிலான சமாதானம் அது. நீண்ட நெடிய கார சாரமான விவாதங்களுக்குப்பின்னர் ஆளு மை கொண்ட தீர்வு ஒன்று எட்டப்பட்டது. நீதி என்பது சமாதானத்திற்கு முன் நிபந்தனை யாக இருக்க முடியுமே தவிர, அதற்கு மாற்றாக இருக்க முடியாது என்பதுதான் அந்த முடி வின் சாராம்சம். அதன் அடிப்படையில்தான் அங்கு உண்மை மற்றும் சமாதான ஆணை யம் அமைக்கப்பட்டது.

நீதிதேவதையின் தராசுகளாக!

உண்மை முதலில் நிலை நாட்டப்பட் டால்தான் சமாதானம் சாத்தியமாகும். நானூறு ஆண்டுகளாக பாப்ரி மசூதி இருந்து வந்திருக் கிறது என்பதே இதில் உண்மையாகும். ஆனால் இராமர் துல்லியமாக இந்த இடத் தில்தான் அவதரித்தார் என்ற மக்களின் “நம் பிக்கைக்கே” உயர்நீதிமன்றம் அதிக அழுத் தம் கொடுத்திருக்கிறது. தீர்ப்பு ஒருபுறம் மசூதி இடிப்பினை நியாயப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை தருகிறது. மறுபுறத்தில் “அதே இடத்திலேயே கோயில்கட்டுவோம்” என்ற கோஷத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதி யினையும் வழங்குகிறது. சொத்து குறித்த தக ராறு ஒன்றில், சட்டவிரோதமான செயல் (இடிப்பு) இறுதித்தீர்ப்பிற்கு ஆதாரமாக அமைய முடியுமா? நிலுவையில் உள்ள மசூதி இடிப்பு குறித்த பல வழக்குகளில் முதலில் நியாயம் வழங்கப்பட வேண்டுமல்லவா?

இந்நிலையில், மக்களுக்கு சட்ட அடிப் படை ஆட்சியின் மீது இருக்கும் “நம்பிக்கை” யின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டுமே தவிர, “நம்பிக்கை”யின் மீது ஆதாரப்படும் சட்டமாக அது மாறிவிடக் கூடாது. தன் முன் நிற்பவர்களின் முகத்தை பாராமல் கண்ணைக் கட்டிக்கொண்டு தரா சின் சமநிலையினை காப்பாற்றுகின்ற நீதி தேவதையின் தீர்ப்பு போன்று அந்தத்தீர்ப்பு அமைய வேண்டும். இன்றைய நிலையில், நீதிமன்றத்தின் வாயிலாக மட்டுமே இந்தப் பிரச்சனையினைத் தீர்க்க முடியும். எனவே இதில் மதரீதியான திரட்டல் கூர்மையடைவ தைத் தடுத்து நிறுத்த வேண்டியது மிகவும் அவசியம். நமது நவீன இந்தியாவின் மதச் சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளை வலு விழக்கச் செய்யும் நிர்ப்பந்தங்களுக்கு இடம் கொடாமல், சட்டத்தின் அடிப்படையில் முடி வுகள் எட்டப்பட்டு நீதி வழங்கப்படவேண் டும். நீதிக்களத்தின் நடவடிக்கைகள் அவ் வாறு அமைய வேண்டும் என்பதே சரியாகும்.

தமிழில்: இ.எம்.ஜோசப்

நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ்

No comments:

Post a Comment